Published : 31 Oct 2020 03:14 AM
Last Updated : 31 Oct 2020 03:14 AM
விழுப்புரம் மாவட்டத்தில் 75.85 டன் விதைகள் விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளதாக விதை ஆய்வு துணை இயக்குநர் மல்லிகா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் தனியார் விதை விற்பனை நிலையங்களில் எனது தலைமையில் திடீர் ஆய்வுமேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் போது தனியார் விதை விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டிருந்த நெல், உளுந்து ரகங்களில் இருந்து விதை மாதிரிகள் எடுக்கப்பட்டு விழுப்புரத்தில் உள்ள விதை பரிசோதனை நிலைய ஆய்வகத் திற்கு அனுப்பப்பட்டது.
விதை மாதிரிகள் ஆய்வில் 1,435 விதை விற்பனை நிலையங்களில் 1,225 விதைகள் முளைப்புத்திறனுக்காக பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. சோதனை முடிவில் 14 தரமற்ற விதை மாதிரிகள் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் விதைச்சட்டத்தை மீறி செயல்பட்ட காரணத்திற்காக 46 தனியார் விதை விற்பனை நிலையங்களில் உள்ள 75.85 டன் விதைகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ 76.69 லட்சமாகும்.
இதுதவிர, அனைத்து நெல் ரகங்களும் கிலோ ரூ 33 முதல் 38 வரை நிர்ணயிக்கப்பட்ட விலையில் மட்டுமே விற்பனை செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டது. மேலும் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாக விற்பது ஆய்வின் போது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட விற்பனையாளர்களின் விதை உரிமம் ரத்து செய்யப்பட்டு நீதி மன்ற நடவடிக்கை தொடரப்படும் என எச்சரிக்கப்பட்டது.
மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வேளாண்விரிவாக்க மையங்களிலும் நடப்புபின் சம்பா பருவத்திற்கு தேவையான நெல் ரகங்கள் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது என்று அச்செய்திக்குறிப்பில் தெரிவித் துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT