Published : 29 Oct 2020 03:01 PM
Last Updated : 29 Oct 2020 03:01 PM

காணொலிக் காட்சி மூலமாக ஸ்டாலின் கலந்துகொள்ளும் தேர்தல் சிறப்புப் பொதுக்கூட்டங்கள்; திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு

மு.க.ஸ்டாலின்: கோப்புப்படம்

சென்னை

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலமாக கலந்துகொள்ளும் 'தமிழகம் மீட்போம்' எனும் தலைப்பிலான 2021, சட்டப்பேரவைத் தேர்தல் சிறப்புப் பொதுக்கூட்டங்களை திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 2021-ம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அதிமுக, திமுக உள்ளிட்ட பிரதான கட்சிகளும் அதன் கூட்டணிக் கட்சிகளும் மும்முரமாக தேர்தல் வேலைகளைத் தொடங்கியுள்ளன.

கரோனா தொற்றுக் காலம் என்பதால் இணைய மாநாடுகள், கருத்தரங்குகள் மூலம் தேர்தல் பணிகள் குறித்து பல கட்சிகள், நிர்வாகிகளுக்கு அறிவுறுத்துகின்றன. இதில் முக்கியமாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக முப்பெரும் விழாக்கள், சிலை திறப்பு விழாக்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கூட்டங்கள், திருமண விழாக்களில் கலந்துகொண்டார்.

இந்நிலையில், காணொலிக் காட்சி வாயிலாக ஸ்டாலின் பங்குபெறும் தேர்தல் சிறப்புப் பொதுக்கூட்டங்களை திமுக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, திமுக தலைமைக் கழகம் இன்று (அக். 29) வெளியிட்ட அறிவிப்பு:

"திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பல்வேறு மாவட்டங்களில் முப்பெரும் விழாக்களில் காணொலிக் காட்சி மூலமாகக் கலந்துகொண்டதைத் தொடர்ந்து, 'தமிழகம் மீட்போம்' எனும் தலைப்பிலான '2021-சட்டப்பேரவைத் தேர்தலுக்கான சிறப்புப் பொதுக்கூட்டங்கள்' நடைபெறும். முதல் கட்டமாகச் சிறப்புப் பொதுக்கூட்டங்கள் கீழே குறிப்பிட்ட தேதிகளில் வருவாய் மாவட்டங்களுக்குட்பட்ட திமுக மாவட்டங்களை ஒருங்கிணைத்து நடைபெறும்.

நவ. 1 - ஈரோடு

நவம்பர் 2- புதுக்கோட்டை (கருணாநிதி சிலை திறப்பு விழா)

நவ. 3 - விருதுநகர்

நவ. 5 - தூத்துக்குடி

நவ. 7 - வேலூர்

நவ. 8 - நீலகிரி

நவ. 9 - மதுரை

நவ. 10 - விழுப்புரம்".

இவ்வாறு திமுக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x