Published : 26 Oct 2020 07:18 PM
Last Updated : 26 Oct 2020 07:18 PM
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு பணிகள் நடைபெறுவதால் அங்கிருந்த மரங்கள் வேரோடு அகற்றப்பட்டு வேறு இடங்களில் நடப்படுகின்றன.
திருநெல்வேலி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
திருநெல்வேலி வேய்ந்தான்குளம் புதிய பேருந்து நிலையத்தில் கூடுதல் வணிக வளாகம், 2 மற்றும் 3-வது தரைத்தளம் சீரமைப்பு, நவீன வசதிகளுடன் வாகன நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இப்பணிகளுக்காக பேருந்து நிலையத்தில் வளர்ந்துள்ள மரங்களை வெட்டி அப்புறப்படுத்தாமல், அவற்றை வேரோடு அகற்றி வெறுஇடங்களில் நடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இப்பணிகள் நேற்று தொடங்கியது. மாநகராட்சி ஆணையர் ஜி. கண்ணன், செயற்பொறியாளர் பாஸ்கரன் உள்ளிட்ட மாவட்ட மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் தொடங்கி வைத்தனர்.
பேருந்து நிலைய பகுதியில் உள்ள வேம்பு, புங்கை உள்ளிட்ட மொத்தம் 106 மரங்களை வேரோடு அகற்றி வேய்ந்தான் குளம் கரை மற்றும் இடவசதியுள்ள பகுதிகளில் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT