Last Updated : 26 Oct, 2015 08:42 AM

 

Published : 26 Oct 2015 08:42 AM
Last Updated : 26 Oct 2015 08:42 AM

மின் கணக்கீட்டாளர்கள் பற்றாக்குறையால் கூடுதல் கட்டணம் செலுத்தும் நுகர்வோர்கள்

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் போதிய கணக்கீட்டாளர்கள் இல்லாததால் வீடுகளுக்கு குறிப்பிட்ட காலத்துக்குள் சென்று மின்பயன்பாடு குறித்து கணக்கிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், நுகர்வோர்கள் கூடுதல் மின்கட்டணம் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு வீடுகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் இதர பிரிவுகளில் 2.52 கோடி மின் நுகர்வோர்கள் உள்ளனர். வீடுகள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துவித நுகர்வோர்களுக்கும் கடந்த ஆண்டு 15 சதவீதம் கட்டணம் உயர்த்தப்பட்டது.

இதன்படி, வீடுகளுக்கான மின் கட்டண உயர்வு 0-100 வரையில் ஒரு யூனிட்டுக்கு ரூ. 3-ம், 0-200 வரையில் ஒரு யூனிட்டுக்கு ரூ.3.25-ம், 201-500 வரையிலான மின் பயன்பாட்டுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.4.60-ம், 501 யூனிட்டுக்கு மேல் ஒரு யூனிட்டுக்கு ரூ.6.60 எனவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இரு மாதங்களுக்கு ஒருமுறை மின் கணக்கீட் டாளர்கள் வீடுகளுக்குச் சென்று மின்பயன்பாடு குறித்து கணக் கெடுப்பர். இந்நிலையில், மின்வாரியத்தில் மின்கணக் கீட்டாளர்கள் போதிய அளவு இல்லாததால் வீடுகளுக்குச் சென்று மின்பயன்பாடு குறித்து கணக்கெடுக்க காலதாமதம் ஏற்படுகிறது. இதனால், நுகர்வோர்கள் கூடுதல் கட்டணம் செலுத்தும் நிலை ஏற்பட்டுள் ளது.

காப்பீட்டுத் தொகை அதிகரிப்பு

இதுகுறித்து, தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் மையத் தின் தலைவர் டி.சடகோபன் கூறியதாவது:

2 மாதங்களுக்கு ஒருமுறை வீடுகளின் மின்பயன்பாடு குறித்து கணக்கெடுக்க மின்வாரியத்தில் இருந்து கணக்கீட்டாளர்கள் வருகின்றனர். இவர்கள் குறிப்பிட்ட தேதியில் வருவதில்லை. அவர்கள் தாமதமாக வருவதால் மின் பயன்பாடு 500 யூனிட்டுக்கு மேல் சென்று விடுகிறது.

இதன் காரணமாக, நுகர்வோர் களுக்கு அரசு வழங்கும் மானியம் கிடைப்பதில்லை. அத்துடன், மின்கட்டணமும் இருமடங்கு அதிகரித்து விடுகிறது. இதனால், நடுத்தர மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து, மின்வாரிய அலுவ லகத்தில் புகார் தெரிவித்தால் அவர்கள் எங்களிடமே மீட்டரில் உள்ள ரீடிங்கை கணக் கெடுத்து கொண்டு வந்து கொடுக்குமாறு கூறுகின்றனர். தற்போது பெரும்பாலான வீடுகளில் டிஜிட்டல் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. இதில், மீட்டர் ரீடிங்கை கணக்கெடுப்பது சிரமமான காரியம். மேலும், மின்நுகர்வு அதிகரிக்கும்போது காப்பீட்டுத் தொகையையும் கூடுதலாக செலுத்த வேண்டி உள்ளது.

இவ்வாறு சடகோபன் கூறினார்.

அதிகாரி விளக்கம்

இதுகுறித்து, மின்வாரிய அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, ஊழியர் பற்றாக்குறை ஒரு முக்கிய காரணமாக உள்ளது. எனினும், குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் வீடுகளுக்குச் சென்று மின்பயன்பாடு குறித்து கணக்கெடுமாறு மின் கணக் கீட்டாளர்கள் அறிவுறுத்தப் படுகின்றனர். எனினும், ஒருசில நேரங்களில் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. விரைவில் இப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x