Published : 23 Oct 2020 03:02 PM
Last Updated : 23 Oct 2020 03:02 PM
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவையோட்டி வங்கியின் பாதுகாப்பில் இருந்த தங்கக்கவசத்தை துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டு நினைவிட பொறுப்பாளர்களிடம் ஒப்படைத்தார்
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் தேசிய தலைவரும், சுதந்திர போராட்ட தியாகியுமான முத்துராமலிங்கத்தேவரின் நினைவிடம் உள்ளது, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா நடைபெறுவது வழக்கம்,
இந்தாண்டு 113 வது ஜெயந்தி மற்றும் 58 வது குரு பூஜை விழா நடைபெறுகிறது, நினைவிடத்தில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு புரட்சி தலைவி அம்மா கழகத்தின் சார்பில் 13 கிலோ தங்க கவசத்தை கடந்த 2014 ஆம் ஆண்டு வழங்கினார்,
5.5 கோடி மதிப்பிலான தங்க கவசம் ஒவ்வொரு ஆண்டும் தேவர் ஜெயந்தி விழாவின் போது கழகத்தின் சார்பில் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு அணிவிக்கப்பட்டு வருகிறது, ஜெயந்தி விழா முடிந்ததும் தங்க கவசம் மதுரை அண்ணாநகரில் உள்ள பாங்க் ஆப் இந்தியா வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்படும்,
இந்த ஆண்டு ஜெயந்தி விழாவுக்காக வங்கியில் இருந்த தங்க கவசத்தை கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் எடுத்து நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாவிடம் ஒப்படைத்தார்,
இந்நிகழ்ச்சியில் வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார், கூட்டுறவு துறை, அமைச்சர் செல்லூர் கே ராஜூ,மாவட்ட ஆட்சியர் வினய்,மாநகராட்சி ஆணையாளர் விசாகன், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர்வி.வி.ராஜன் செல்லப்பா, ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி, கழக அமைப்புச் செயலாளர் முத்துராமலிங்கம், முன்னாள் அமைச்சர் மணிகண்டன், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ் எஸ் சரவணன், கே.மாணிக்கம், பா.நீதிபதி, கழகச் செய்தித் தொடர்பாளர் அண்ணாதுரை, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் எம் எஸ் பாண்டியன், மாவட்ட கழக துணை செயலாளர் தங்கம், மாவட்ட கழக பொருளாளர் ராஜா, மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அவைத்தலைவர் அய்யப்பன், கழக அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல் ,மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், ஒன்றிய கழகச் செயலாளர்கள் நிலையூர் முருகன், அன்பழகன், ராமசாமி, மகாலிங்கம், பொன் ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்
ஆயுதம் ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்புடன் பசும்பொன்னுக்கு தங்க கவசம் செல்லப்பட்டடு, இக்கவசம் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு அணிவிக்கப்பட்டது,
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT