Published : 22 Oct 2020 01:12 PM
Last Updated : 22 Oct 2020 01:12 PM

புதிதாகப் பிரிக்கப்பட்ட 5 மாவட்டங்கள்; சட்டப்பேரவைத் தொகுதிகள் விவரம்: தேர்தல் ஆணையம் வெளியீடு

சென்னை

தமிழகத்தில் புதிதாக 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட்ட நிலையில், அதற்கான தேர்தல் உட்கட்டமைப்பை தேர்தல் ஆணையம் அறிவித்தது. தற்போது 5 மாவட்டங்களில் அடங்கியுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள் குறித்த விவரங்களை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழக அரசின் நிர்வாக வசதிக்காக விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம், கள்ளக்குறிச்சி என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இதேபோன்று காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு எனவும், வேலூர் மாவட்டம் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் எனவும், திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலி, தென்காசி எனவும் பிரிக்கப்பட்டன. இதனால் மாவட்டங்களின் எண்ணிக்கை 37 ஆனது.

ஏற்கெனவே உள்ள 32 மாவட்டங்களுக்குத் தேர்தல் அதிகாரிகள் செயல்பட்டு வரும் நிலையில், தற்போது பிரிக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்குத் தேர்தல் அதிகாரிகள் மற்றும் தேர்தல் உள்கட்டமைப்பு குறித்து தேர்தல் ஆணையம் அறிவித்தது.

விழுப்புரம், திருநெல்வேலி, காஞ்சிபுரம் மற்றும் வேலூர் மாவட்டங்களின் பிரிக்கப்படுதல்/ தனியாக்கப்படுதல் காரணமாக ஐந்து புதிய மாவட்டங்கள், அதாவது கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல்கள், எபிக் (EPIC data base) ஈபிஐசி தரவுத்தளத்தைப் பராமரிப்பதற்காக தேர்தல் நிர்வாகத்திற்கான தனி உள்கட்டமைப்பு இம்மாவட்டங்களில் நிறுவப்பட்டுள்ளது.

தற்போது இந்த 5 மாவட்டங்களில் அடங்கியுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள் குறித்துத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்ட அறிவிப்பு:

காஞ்சிபுரம் மாவட்டம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11 சட்டப்பேரவைத் தொகுதிகள் முன்பு இருந்த நிலையில் தற்போது அது காஞ்சிபுரம், செங்கல்பட்டு எனப் பிரிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம்: 4 சட்டப்பேரவைத் தொகுதிகள்

1.ஆலந்தூர், 2.ஸ்ரீபெரும்புதூர்(தனி), 3.உத்திரமேரூர், 4.காஞ்சிபுரம்

செங்கல்பட்டு மாவட்டம்: 7 சட்டப்பேரவைத் தொகுதிகள்

1.சோழிங்கநல்லூர், 2.பல்லாவரம், 3.தாம்பரம், 4.செங்கல்பட்டு, 5.திருப்போரூர், 6.செய்யூர் (தனி)7.மதுராந்தகம் (தனி)

வேலூர் மாவட்டம்

வேலூர் மாவட்டத்தில் 13 சட்டப்பேரவைத் தொகுதிகள் இருந்த நிலையில் அது வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் என மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம்: 5 சட்டப்பேரவைத் தொகுதிகள்

1.காட்பாடி, 2.வேலூர், அணைக்கட்டு, 3.கீழ்வைத்தியனான் குப்பம் (தனி), 4.குடியாத்தம் (தனி)

ராணிப்பேட்டை மாவட்டம்: 4 சட்டப்பேரவைத் தொகுதிகள்

1.அரக்கோணம் (தனி), 2.சோளிங்கர், 3.ராணிப்பேட்டை, 4.ஆற்காடு

திருப்பத்தூர் மாவட்டம்: 4 சட்டப்பேரவைத் தொகுதிகள்

1.வாணியம்பாடி, 2.ஆம்பூர், 3.திருப்பத்தூர், 4.ஜோலார்பேட்டை

விழுப்புரம் மாவட்டம்:

விழுப்புரம் மாவட்டத்தில் 11 சட்டப்பேரவைத் தொகுதிகள் இருந்த நிலையில் அது விழுப்புரம், கள்ளக்குறிச்சி என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம்: 7 சட்டப்பேரவைத் தொகுதிகள்

1.விழுப்புரம், 2.செஞ்சி, 3.மைலம், 4.திண்டிவனம் (தனி), 5.வானூர் (தனி), 6.விக்கிரவாண்டி, 7.திருக்கோயிலூர்

கள்ளக்குறிச்சி மாவட்டம்: 4 சட்டப்பேரவைத் தொகுதிகள்

1.உளுந்தூர் பேட்டை, 2.ரிஷிவந்தியம், 3.சங்கராபுரம், 4.கள்ளக்குறிச்சி (தனி)

திருநெல்வேலி மாவட்டம்:

திருநெல்வேலி மாவட்டத்தில் 10 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இது திருநெல்வேலி, தென்காசி என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம்: 5 சட்டப்பேரவைத் தொகுதிகள்

1.திருநெல்வேலி, 2.அம்பாசமுத்திரம், 3.பாளையங்கோட்டை, 4.நாங்குநேரி, 5.ராதாபுரம்.

தென்காசி மாவட்டம்: 5 சட்டப்பேரவைத் தொகுதிகள்

1.சங்கரன்கோவில் (தனி, 2.வாசுதேவநல்லூர் (தனி), 3.கடையநல்லூர், 4.தென்காசி, 5.ஆலங்குளம்.

இவ்வாறு தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x