Published : 22 Oct 2020 12:20 PM
Last Updated : 22 Oct 2020 12:20 PM

டன் கணக்கில் இறக்குமதி; மதுரையில் எகிப்து வெங்காயம் விற்பனை: கிலோ ரூ.70-க்கு விற்கும் வியாபாரிகள்

மதுரை மாட்டுத்தாவணி சென்ட்ரல் மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்துள்ள ஈரான் நாட்டு பெரிய வெங்காயம். படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி

மதுரை

மதுரையில் ஆப்கானிஸ்தான், எகிப்து நாட்டில் இருந்து பெரிய வெங்காயம் தருவிக்கப்பட்டு நேற்று முதல் விற்பனை தொடங்கியது.

தமிழகத்தில் வெங்காயத்தின் விலை அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் மாட்டுத்தாவணி சென்ட்ரல் மார்க்கெட்டில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.80-க்கு விற்றது. சின்ன வெங்காயம் கிலோ ரூ.100-க்கு விற்றது.

சில்லறை விற்பனைக் கடைகளில் இதைவிடக் கூடு தல் விலைக்கு விற்றதால் பொது மக்கள் வெங்காயம் வாங்காமல் தவிர்த்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி நேரத்தில் வெங்காயத்தை வியாபாரிகள் பதுக்குவதால் இதுபோல விலை உயர்வு ஏற்படுவதாகவும், தற்போது மழை பெய்து வருவதால் வெளிமாநில வெங்காய வரத்து குறைந்து விலை கூடுதலாக விற்பதாகவும் கூறப்படுகிறது. அதிகபட்சமாக நேற்று ஒத்தக்கடை பகுதியில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.140-க்கும், சின்ன வெங்காயம் ரூ.150-க்கும் விற்றதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பல ஹோட்டல்களில் ஆம்லெட் போடுவதை தற் காலிகமாக நிறுத்தி விட்டனர்.

இந்நிலையில், வெங்காய விலையைக் கட்டுப்படுத்த வெளி நாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்யத் தொடங்கி விட்டனர். நேற்று எகிப்து, ஆப்கானிஸ்தானில் இருந்து வெங்காயம் மதுரைக்கு தருவிக் கப்பட்டது.

ஆப்கனில் இருந்து 150 டன்களும், எகிப்தில் இருந்து 32 டன்களும் வந்துள்ளன.

மதுரை அருகே கப்பலூருக்கு எகிப்தில் இருந்து வெங்காயம் வந்துள்ளது. ஆப்கானிஸ்தான் வெங்காயம் விலை கிலோ ரூ.70-க்கு விற்றது.

ஆனால், வியாபாரிகளும், பொதுமக்களும் இந்த வெங் காயத்தை வாங்கப் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x