Published : 21 Oct 2020 05:51 PM
Last Updated : 21 Oct 2020 05:51 PM

அரசு தொழிற்பயிற்சி மையத்தில் பார்வைத் திறனற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ஓராண்டுப் பயிற்சி; விண்ணப்பங்கள் வரவேற்பு

பிரதிநிதித்துவப் படம்.

சென்னை

பார்வையற்றோருக்கான அரசு தொழிற்பயிற்சி மையத்தில் புத்தகம் கட்டுபவர் தொழிற் பயிற்சிப் பிரிவில், பார்வைத் திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான ஓராண்டுப் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (அக். 21) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையரகத்தின் கீழ் இயங்கும், பூவிருந்தவல்லியிலுள்ள பார்வையற்றோருக்கான அரசு தொழிற்பயிற்சி மையத்தில் புத்தகம் கட்டுபவர் (ஆண்கள்/பெண்கள்) தொழிற் பயிற்சிப் பிரிவில், இலவச விடுதி வசதியுடன் பார்வைத் திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு 2020-21 ஆம் நிதியாண்டுக்கான ஓராண்டுப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இப்பயிற்சி பார்வையற்றோருக்கான அரசு தொழிற்பயிற்சி மையம், பூவிருந்தவல்லி, சென்னை-56 என்ற முகவரியில் நடைபெற உள்ளது. பயிற்சியாளர்களுக்கு பயிற்சி உதவித்தொகையாக மாதந்தோறும் ரூ.300 அளிக்கப்படும்.

இந்த ஆண்டுக்கான இப்பயிற்சியில் சேர்த்துக் கொள்வதற்கான கல்வித் தகுதி 8 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் வயது வரம்பு 31.08.2020 அன்று 14 வயதிலிருந்து 40 வயது வரையுள்ள, பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளியாக இருத்தல் வேண்டும்.

விண்ணப்பங்கள் பார்வையற்றோருக்கான அரசு தொழிற்பயிற்சி மையம், பூவிருந்தவல்லி, சென்னை-56 மற்றும் அனைத்து மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள். 23.10.2020 மாலை 5.45க்குள்".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

முதல்வர்-புலனாய்வாளர்,

பார்வையற்றோருக்கான அரசு தொழிற்பயிற்சி மையம்,

பூவிருந்தவல்லி, சென்னை -600 056.

மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர்

பயிற்சிக்கான விவரங்கள்

1. பயிற்சி மற்றும் காலம்: புத்தகம் கட்டுபவர் (ஓராண்டுப் பயிற்சி) (ஆண்கள்/பெண்கள்)

2. பயிற்சிக்குத் தகுதியான நபர்: பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மட்டும் (ஆண்கள்/பெண்கள்)

3. வயது வரம்பு: 14 வயது முடிந்தவராகவும் 40 வயதுக்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். (31.08.2020-ன்படி)

4. கல்வித் தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும்

5. இதர விவரங்கள்: பயிற்சிக் காலத்தில் பயிற்சியாளர்களுக்குத் தங்குமிடம், உணவு, பயிற்சிக்குத் தேவையான உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படும்

6. பயிற்சி அளிக்கப்படும் இடம் பார்வையற்றோருக்கான அரசு தொழிற்பயிற்சி மையம், பூவிருந்தவல்லி, சென்னை - 600 056.

7. விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 23.10.2020

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x