Published : 20 Oct 2020 12:49 PM
Last Updated : 20 Oct 2020 12:49 PM
கோவை மாவட்டத்தில் 1,400-க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் ரேஷன் கடைகள் உள்ளன. 10 லட்சத்துக்கும் மேற்பட்ட கார்டுதாரர்கள் உள்ளனர். அரசு உத்தரவின் பேரில், ரேஷன் கடைகள் மூலம், கார்டுதாரர்களுக்கு முகக் கவசம் இலவசமாக விநியோகிக்கப்பட்டது. தற்போது கரோனா தொற்று தடுப்பு மருந்துகள், சத்து மாத்திரைகள் அடங்கிய மருந்து பெட்டகமும் ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்கப்பட்டுவருகிறது.
இதுகுறித்து மாவட்ட வழங்கல் பிரிவு அதிகாரிகள் கூறும்போது, ‘‘ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில், ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படும் பெட்டகத்தில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் மாத்திரை கள், சூரணம், கபசுர குடிநீர் பாக்கெட் மற்றும் இவற்றை பயன்படுத்தும் முறை குறித்த விளக்க குறிப்பு போன்றவை இருக்கும். ஒரு கார்டுதாரருக்கு ஒரு பெட்டகம் என்ற அடிப்படையில் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT