Published : 20 Oct 2015 07:50 AM
Last Updated : 20 Oct 2015 07:50 AM

ஸ்டாலினின் ‘நமக்கு நாமே’ பயணத்துக்கு பதிலடி: கிராமங்களில் மக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு வாங்கும் அமைச்சர்கள்

நமக்கு நாமே விடியல் மீட்பு பயணத்தில் அரசுக்கு எதிராக மு.க.ஸ்டாலின் எடுத்துவைக்கும் குற்றச்சாட்டுகளை சமாளிக்கும் வகையில் அதிமுக அமைச்சர்களே சிறப்பு மனு நீதி முகாம்களை நடத்துகின்றனர்.

நமக்கு நாமே விடியல் மீட்புப் பயணத்தின்போது ஸ்டாலின் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடி வருகிறார். பொது மக்களிடம் மனுக்களை வாங்கி வருவதுடன் அதிமுக அரசின் செயல்பாடுகள் குறித்து கடுமை யாக விமர்சனம் செய்து வருகி றார். இதற்கெல்லாம் பதிலடி கொடுப் பதற்காக களமிறங்கி இருக்கும் அதிமுக அமைச்சர்கள், சிறப்பு மனு நீதி முகாம்களை நடத்தி வரு கின்றனர்.

அந்தந்த தொகுதிகளில் உள்ள தாலுகா தலைநகரங்கள் அல்லது ஒன்றிய அலுவலகத்தில் இந்த மனுநீதி முகாம்கள் நடத்தப்படு கின்றன. இதில் மாவட்ட அமைச்சர், ஆட்சியர் உள்ளிட்டோர் கலந்து கொள்கின் றனர். அனைத்துத் துறை சார்ந்த முக்கிய அதிகாரிகளும் கட்டாயம் இந்த முகாம்களுக்கு வர வேண்டும் எனவும் அறிவுறுத் தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த 16-ம் தேதி தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் ஒன்றியத்தில் நடந்த சிறப்பு மனுநீதி முகாமில் வீட்டுவசதித் துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் கலந்து கொண்டார். முகாமில் பெறப்பட்ட மனுக்களில் சிலவற் றுக்கு அப்போதே நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. எஞ்சிய மனுக் கள், சம்பந்தப்பட்ட துறை களின் அதிகாரிகளிடம் ஒப்படைக் கப்பட்டு, குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் அவற்றின் மீது எடுக் கப்பட்ட நடவடிக்கை தொடர்பான அறிக்கையை ஆட்சியருக்கு அனுப்பி வைக்க அறிவுறுத்தப் பட்டது. இந்த முகாமில் கலந்து கொண்ட சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற் பட்டவர்களுக்கு மதிய உணவுக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.

அமைச்சர்கள் கிராமங்களுக்கு நேரில் சென்று ஒரே இடத்தில் மக்களைத் திரட்டி, மனுக்களை பெற்று வருகின்றனர். தங்கள் பயணத்தின்போது மாவட்ட அதிகாரிகளையும் அவர்கள் தங்க ளோடு அழைத்துச் செல்கின்றனர். இது பொதுமக்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறப்பு மனு நீதி முகாம்கள் மற்றும் மனு வாங்கும் படலங்கள் குறித்து கூட்டுறவுத் துறை அமைச்சரும் மதுரை மாநகர் மாவட்ட அதிமுக செயலாள ருமான செல்லூர் கே.ராஜுவிடம் கேட்டபோது, ’’ஸ்டாலினுக்கு பயந்துகொண்டு மனு நீதி முகாம்களை நடத்தவில்லை. மக்களைத் தேடி மாவட்ட நிர்வாகம் என்ற பெயரில் ஏற்கெனவே முதல்வர் அறிவித்த ‘அம்மா திட்டத்தின்’படிதான் வெள்ளிக்கிழமைதோறும் சிறப்பு மனு நீதி முகாம்கள் நடத்தப்படுகின்றன. இந்த முகாம்கள் மூலம் இதுவரை சுமார் 10 லட்சம் பேருக்கு புதிதாக பட்டா வழங்கப்பட்டதுடன் 50 லட்சம் பேருக்கு பட்டா மாறுதலும் செய்து தரப்பட்டுள்ளது. சுமார் 2 லட்சம் பேருக்கு புதிதாக குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

அதிமுக ஆட்சியின் நான்கரை ஆண்டு சாதனைகளை தெரு முனைக் கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள் வாயிலாக மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பது முதல்வரின் கட்டளை. அதன்படி தான், நாங்கள் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரச்சாரக் கூட்டங்களை நடத்தி வருகிறோம்’’ என்றார்.

அமைச்சர்கள் கிராமங்களுக்கு நேரில் சென்று ஒரே இடத்தில் மக்களைத் திரட்டி, மனுக்களை பெற்று வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x