Published : 04 Oct 2015 10:28 AM
Last Updated : 04 Oct 2015 10:28 AM
காய்கறி ஏற்றி வரும் லாரிகளுக்கு வேலை நிறுத்தத்தில் இருந்து தற்காலிகமாக விலக்கு அளிக்கப் பட்டிருப்பதாக தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சங்க கூட்ட மைப்பு தலைவர் யுவராஜ் தெரி வித்துள்ளார்.
சுங்கச் சாவடிகளை மூடக் கோரி அகில இந்திய மோட்டார் காங்கிரஸ், அக்டோபர் 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் காலவரை யற்ற வேலை நிறுத்தத்தை மேற் கொண்டு வருகிறது. இதற்கு நாடு முழுவதும் பல்வேறு லாரி உரிமையாளர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. சென்னையைப் பொறுத்தவரை தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் எஸ்.யுவ ராஜ் தலைமையில் வேலை நிறுத்தம் மற்றும் சுங்கச்சாவடி முற்றுகை போராட்டங்கள் நடை பெற்று வருகிறது. லாரிகள் வேலை நிறுத்தத்தால் காய்கறிகளின் விலை உயரக் கூடும் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந் துள்ளது. இது தொடர்பாக கோயம்பேடு மார்க்கெட் தக்காளி வியாபாரிகள் சங்கத் தலைவர் எம்.தியாகராஜனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
கோயம்பேடு மார்க்கெட் டுக்கு வழக்கம் போல லாரிகளில் காய்கறிகள் வந்துகொண்டி ருக்கின்றன. சித்தூர் உள்ளிட்ட சில பகுதிகளில் காய்கறிகளை ஏற்றி வரும் லாரிகளை அப்பகுதி லாரி உரிமையாளர் சங்கத்தினர் மடக்கி, அவற்றை இயக்க எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி காய்கறி வரத்தில் பாதிப்பு இல்லை. விலை உயர்வும் ஏற்படவில்லை. லாரி உரிமையாளர்கள் காய்கறி லாரிகளுக்கு மட்டும் வேலை நிறுத் தத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். இவ்வாறு தியாகராஜன் கூறினார்.
இதுபற்றி தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் எஸ்.யுவராஜ் கூறியதாவது:
வேலை நிறுத்தம் வெற்றிகர மாக நடைபெற்று வருகிறது. பால், குடிநீர், காய்கறி, காஸ், பெட் ரோல், டீசல் போன்ற பொது மக்களுக்கு தேவையான அத்தி யாவசிய பொருட்களை ஏற்றி வரும் லாரிகளுக்கு வேலை நிறுத்தத்தில் இருந்து தற்காலிக விலக்கு அளித்திருக்கிறோம். எங்கள் போராட்டத்தை தீவிரப்படுத் தும் நிலை ஏற்பட்டால், அனைத்து லாரிகளும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும். இவ்வாறு யுவராஜ் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT