Published : 19 Oct 2020 11:54 AM
Last Updated : 19 Oct 2020 11:54 AM

குஜிலியம்பாறையில் மரங்களை வெட்டுவதைத் தடுத்த ஜோதிமணி: எம்.பி.யுடன் அதிமுக நிர்வாகி மோதல்

வேடசந்தூர்

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம் பாறை அருகே தொழிற்பேட்டை அமைக்கும் பணிக்காக வனத் துறை இடத்தில் மரங்கள் வெட்டப்படுவதைத் தடுத்த கரூர் எம்பி ஜோதிமணியுடன் அதிமுக நிர்வாகி மோதலில் ஈடுபட்டார்.

குஜிலியம்பாறை அருகே உள்ள ஆர்.கோம்பை சீலக்கரடு பகுதியில் வனத்துறைக்குச் சொந்தமான 56 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த இடத்தில் வேம்பு, புளியமரம், தோதகத்தி உட்பட பல்வேறு மரங்கள் உள் ளன. இப்பகுதியில் சிட்கோ தொழிற்பேட்டை அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக சீலக்கரடு பகுதியில் மரங்களை வெட்டும் பணி நடக்கிறது. வறண்ட பகுதியில் மரங்களை வெட்ட இப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதற்கு எந்த நடவடிக்கையும் இல்லாததால், கரூர் எம்.பி. ஜோதி மணி தலைமையில் மரங்களை வெட்டிய வாகனங்களை முற்று கையிட்டு, அப்பகுதி மக்கள் நேற்று முன்தினம் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, மரங் கள் வெட்டுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், நேற்று மீண்டும் மரங்களை வெட்டத் தொடங்கினர். இதையடுத்து ஜோதிமணி எம்.பி. மரங்களை வெட்டும் இடத்துக்கு வந்தார். இதையறிந்ததும் வாகனங் களுடன் அங்கிருந்து சென்றனர்.

ஜோதிமணி எம்.பி. செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

‘சிப்காட்' பெயரில் ரூ. 200 கோடி மதிப்புள்ள மண் வளம், மரங்களை ஆளும் கட்சியினர் கொள்ளையடிக்க முயற்சி செய்கின்றனர்.

இதைத் தடுத்த என்னுடன் அதிமுக ஒன்றியச் செயலாளர் மலர்வண்ணன் தகராறு செய்து தரக் குறைவாகப் பேசினார். அவர் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்க உள்ளேன் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x