Published : 19 Oct 2020 07:29 AM
Last Updated : 19 Oct 2020 07:29 AM
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா முகூர்த்தக் கால் நடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா டிச.14-ம் தேதி முதல் 2021, ஜன.4-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி, ஆயிரங்கால் மண்டபம் அருகே கோயில் இணை ஆணையர் பொன்.ஜெயராமன் முன்னிலையில் நேற்று முகூர்த்தக் கால் நடப்பட்டது. இதில் பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.
வைகுண்ட ஏகாதசி பெருவிழா டிச.14-ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து, டிச.15-ம் தேதி முதல் டிச.24-ம் தேதி வரை பகல் பத்து திருவிழாக்களும், டிச.24-ம் தேதி நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலமும் நடைபெற உள்ளன. முக்கிய விழாவான பரமபத வாசல் திறப்பு டிச.25-ம் தேதி அதிகாலை 4.45 மணியளவில் நடைபெறும்.
டிச.31-ம் தேதி நம்பெருமாள் கைத்தல சேவையும், ஜன.1-ம் தேதி திருமங்கை மன்னன் வேடுபறி விழாவும், ஜன.3-ம் தேதி தீர்த்தவாரியும், ஜன.4-ம் தேதி நம்மாழ்வார் மோட்சமும் நடைபெற உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT