Published : 17 Oct 2020 12:02 PM
Last Updated : 17 Oct 2020 12:02 PM
Admk
மற்றும் புறநகமதுரை மாவட்ட அதிமுக, மாநகரம், புறநகர் கிழக்கு ர் மேற்கு ஆகிய மூன்று மாவட்டங்களாகச் செயல் படுகிறது. மாநகர மாவட்டச் செய லாளராக அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளராக அமைச்சர் ஆர்பி.உதயகுமார், புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளராக ராஜன் செல்லப்பா எம்எல்ஏ ஆகியோர் உள்ளனர்.
மாநகர் அதிமுகவில் மதுரை மத்தி, மேற்கு, தெற்கு, வடக்கு தொகுதிகள் உள்ளன.
புறநகர் கிழக்கு மாவட்டத்தில் திருப்பரங்குன்றம், மேலூர், மதுரை கிழக்கு ஆகிய தொகு திகளும், புறநகர் மேற்கு மாவட்டத்தில் உசிலம்பட்டி, திருமங்கலம், சோழவந்தான் ஆகிய தொகுதிகளும் வருகின்றன. தற்போது மாநகரத்தையும், புறநகர் போல் 2 ஆக பிரிக்க உள்ளதாக அக்கட்சியினர் மத்தி யில் தகவல் பரவுகிறது.
6 மாதத்துக்கு முன்பே, மாநகரத்தில் உள்ள 4 தொகுதிகளில் தலா 2 தொகுதிகள் வீதம் மாநகரத்தை 2 ஆக பிரிக்க அதிமுக தலைமை முடிவெடுத்தது. அதன் பின்னணியில் ஆர்.பி. உதய குமார் இருந்ததாகக் கூறப்பட்டது. ஏனெனில் அவரது ஆதரவாளரும், தெற்குத் தொகுதி எம்எல்ஏவுமான சரவணனுக்கு மாவட்டச் செயலர் பதவியைப் பெற்றுத் தர ஆர்.பி. உதயகுமார் முதல்வரிடம் தனது நெருக்கத்தை பயன்படுத்தி முயற்சித்ததாகக் கூறப்பட்டது.
அதற்கு செல்லூர் கே. ராஜூ எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த முடிவு கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில் சரவணன் மாநகர் மாவட்டச் செயலர் பதவியைக் குறிவைத்து ஆர்.பி. உதயகுமார் மூலம் தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார்.
தேர்தலுக்கு முன்பே மாநகர் அதிமுகவை 2 ஆகப் பிரிக்க வாய்ப்புள்ளது. இதைத் தடுக்க அமைச்சர் செல்லூர் கே. ராஜூ சமீபத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசியதாகக் கூறப் படுகிறது என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT