Published : 17 Oct 2020 11:58 AM
Last Updated : 17 Oct 2020 11:58 AM
கரோனா ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மதுரை காந்தி அருங்காட்சியகம், திருமலை நாயக்கர் மஹாலைத் திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் முதல் சுற்றுலா தலங்கள், கோயில்கள் மூடப்பட்டன. கரோனா ஓரளவு கட்டுக்குள் வந்த பின்பு படிப்படியாக தளர் வுகள் அறிவிக்கப்பட்டன. அதன் படி, கொடைக்கானல் உள் ளிட்ட சுற்றுலாத் தலங்களில் சில கட்டுப்பாடுகளுடன் சுற்றுலா பயணிகள் வர அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
பிரசித்தி பெற்ற ஆன்மிக தலங்களான ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில், திருப்பரங்குன்றம் மற்றும் பழநி முருகன் கோயில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனு மதிக்கப்படுகின்றனர். ஆனால், மதுரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் விரும்பிப் பார்க்கும் இடங்களான திருமலை நாயக்கர் மஹால், காந்தி அருங்காட்சியகம் ஆகியவை திறக்கப்படவில்லை.
மஹாலில் சேதமடைந்திருந்த சுவர்கள், மேற்கூரைகள் உள்ளிட்டவற்றை கரோனா ஊரடங்கின்போது புதுப்பிக்கும் பணிகள் துரிதமாக மேற்கொள் ளப்பட்டன.
தற்போது இப்பணிகள் அனைத்தும் முடிவடைந்து மஹால் புதுப்பொலிவுடன் உள் ளது. மஹாலையும், காந்தி அருங்காட்சியகத்தையும் மக்கள் பார்வையிட அரசு அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந் துள்ளது.
இதுகுறித்து காந்தி அருங் காட்சியக நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, "நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியகங்களைத் திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கிவிட்டது. ஆனால், தமிழக அரசு இன்னும் அனுமதி வழங்காததால் எங்களால் திறக்க முடியவில்லை. அரசு அனுமதியளித்ததும் திறக்கப்படும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT