Published : 17 Oct 2020 11:38 AM
Last Updated : 17 Oct 2020 11:38 AM
புதுச்சேரி அரசு வாகனங்களுக்கு எரிபொருள் தர முடியாமல் தொடர்ந்து மூடியிருந்த அமுத சுரபி பெட்ரோல் பங்க் ஆட்சியர் உத்தரவுப்படி கையகப் படுத்தப்பட்டது. இதையடுத்து எரிபொருள் நிரப்ப இசிஆரில் அரசு வாகனங்கள் வரிசைக்கட்டி நின்றன.
புதுச்சேரி அமுதசுரபியில் 240 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு கடந்த 9 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதில் ரூ.12 கோடி அரசு தரப்பில் நிலுவைவைக்கப்பட்டுள்ளது. அந்த நிலுவைத் தொகையை அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஊழியர்கள் பணியை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அரசு வாகனங்களுக்கு இசிஆரில் உள்ள அமுதசுரபி பெட்ரோல் பங்கில் தான் பெட்ரோல், டீசல் போடுவது வழக்கம். தற்போது அரசு வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் போட முடியாத நிலை இருந்ததால் பெட்ரோல் பங்கை கையகப்படுத்த உழவர்கரை தாசில்தாருக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். அதன்படி பெட்ரோல் பங்க் கையகப்படுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து நேற்று பெட்ரோல் பங்க் திறக்கப்பட்டதால் கடந்த சில நாட்களாக எரிபொருள் நிரப்பாத அரசு வாகனங்கள் ஏராளமானவை எரிபொருள் நிரப்ப வந்தன.
இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. இதை பொதுமக்கள் வேடிக்கை பார்த்தபடி சென்றனர்.
அமுதசுரபி பெட்ரோல் பங்கில் தான் பெட்ரோல், டீசல் போடுவது வழக்கம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT