Published : 28 Sep 2015 07:07 AM
Last Updated : 28 Sep 2015 07:07 AM

டெல்டாவில் சம்பா சாகுபடி பாதிக்கும் நிலை: காவிரி கண்காணிப்பு குழு டெல்லியில் இன்று கூடுகிறது - தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்குமா?

காவிரி நதிநீர் கண்காணிப்பு குழுவின் கூட்டம் டெல்லியில் இன்று நடக்கிறது. கர்நாடகத்திடம் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் பெற்றுத்தர இந்தக் கூட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு விவசாயிகளிடம் எழுந்துள்ளது.

ஆண்டுதோறும் ஜூன் 12-ல் காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையிலிருந்து தண் ணீர் திறக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு மேட்டூரில் குறைந்த அளவு தண்ணீரே இருந்ததால், ஆகஸ்ட் 9-ம் தேதிதான் அணை யிலிருந்து தண்ணீர் திறக்கப் பட்டது. எனினும், வெண்ணாறு மற்றும் காவிரியில் முறை வைத்துதான் தண்ணீர் திறக்கப் படுகிறது. இதனால், ஏற்கெனவே சாகுபடி செய்துள்ள குறுவைப் பயிரைக் காப்பாற்ற முடியாமலும், சம்பா சாகுபடிப் பணிகளைத் தொடங்க முடியா லும் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர்.

கர்நாடகத்திடம் இருந்து காவிரி நீரைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, டெல்டா மாவட் டங்களில் விவசாயிகள் சாலை மறியல் மற்றும் மத்திய அரசு நிறுவனங்களுக்கு முன்பு முற்று கைப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால், காவிரியில் தண்ணீர் திறந்துவிட முடியாது என்று கர்நாடக அரசு திட்டவட்டமாக கூறி வருகிறது. காவிரியில் கர்நாடகம் தண்ணீர் திறந்துவிடாததால் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாகக் குறைந்து வருகிறது. அணையில் தற்போது 64 அடி மட்டுமே தண்ணீர் உள்ளது. அதிகபட்சம் 2 வாரங்களுக்கு மட்டுமே டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்கும் என்பதால் சம்பா சாகுபடியும் முழுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், காவிரி கண்காணிப்பு குழுக் கூட்டம் டெல்லியில் இன்று நடக்கிறது. காவிரி நதிநீர்ப் பிரச்சினையை தீர்க்க மத்திய அரசால் அமைக்கப் பட்ட நடுவர் மன்றம், 2007-ல் இறுதித் தீர்ப்பை வழங்கியது. காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு ஆண்டுக்கு 192 டிஎம்சி நீரை கர்நாடகம் வழங்க வேண்டும். மாதாந்திர நிர்ணய அடிப்படையில் தண்ணீர் விட வேண்டும். இதற் காக காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் பங்கீட்டு ஒழுங்குமுறை குழுவை அமைக்க வேண்டும் என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த உத்தரவு மத்திய அரசின் கெஜட்டில் வெளியிடப்பட்டது. ஆனாலும், கர்நாடகத்திடம் இருந்து உரிய நீரைப் பெற்றுத் தரவும், காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்குமுறை குழுவை அமைக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

இதை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. 2013-ல் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, தங்கள் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடப்ப தால் அவகாசம் வழங்க வேண் டும் என கர்நாடகம் தரப்பில் கோரப்பட்டது. இதையடுத்து இரு மாநிலங்களும் பிரச்சினையின்றி காவிரியில் நீரைப் பகிர்ந்து கொள்ள தற்காலிகமான கண்காணிப்பு குழுவை அமைத்து உத்தரவிட்டது.

மத்திய நீர்வளத் துறை செயலாளரை தலைவராகவும் தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி மாநிலங்களின் தலை மைச் செயலாளர்களை உறுப்பி னர்களாகவும் கொண்ட இந்தக் குழுதான் டெல்லியில் இன்று கூடுகிறது. இக்கூட்டத்தில் தமிழக அரசு கடுமையாக வாதாடி, உரிய நீரை பெற்றுத்தர வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

இதுகுறித்து அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் கூறும்போது, ‘‘தமிழ கத்துக்கு உரிய நீரை கர்நாடகத் திடம் இருந்து பெற்றுத் தரவும், காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்குமுறை குழுவை உடனடியாக அமைக்குமாறு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யவும் கண்காணிப்பு குழுக் கூட்டத்தில் முடிவெடுக்க வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x