Last Updated : 13 Oct, 2020 03:26 PM

 

Published : 13 Oct 2020 03:26 PM
Last Updated : 13 Oct 2020 03:26 PM

ஆசிரியர் பணி நியமனத்துக்கு வயது வரம்பு நிர்ணயிக்கும் அரசாணையை திரும்பப் பெற வேண்டும்: முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை

தென்காசி

ஆசிரியர் பணி நியமனத்துக்கு வயது வரம்பு நிர்ணயிக்கும் அரசாணையை திரும்பப் பெற வேண்டும் என முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக திருநெல்வேலி, தென்காசி மாவட்ட நிர்வாகிகள் முருகன், பாபு செல்வன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் ஆசிரியர்களின் பணி நியமனத்துக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும், அதன்படி 40 வயதைக் கடந்தவர்களுக்கு வரும் காலங்களில் ஆசிரியர் பணி கிடைக்க வாய்ப்பில்லை என தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது.

இந்த ஆணை ஆசிரியர் பணிக்கு படித்து முடித்து, தகுதி பெற்று காத்திருக்கும் லட்சத்துக்கும் மேற்பட்டவர்களின் ஆசிரியர் பணி கனவை சிதைக்கும் வகையில் உள்ளது.

பெரும்பான்மையான மாநிலங்களில் பணியில் சேர வயது வரம்பு நிர்ணயிக்கப்படாத ஒரே பணி ஆசிரியர் பணி மட்டுமே. ஒருவர் ஆசிரியர் பணியில் ஓராண்டு பணி நிறைவு செய்யும் தகுதியை பெற்றிருக்க வேண்டும் என்பதுதான் ஒரே நிபந்தனை என்பது தமிழகத்தில் இதுவரை பின்பற்றப்பட்டு வருகிறது.

அதன்படி, ஆசிரியர் பணிக்கு தகுதி பெற்ற ஒருவர் 57 வயதில்கூட பணியில் சேர முடியும். மேலும், தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கு படித்து, தகுதி பெற்று வேலைவாய்ப்பகத்தில் பதிந்து பணி நியமனத்துக்காக காத்திருப்பவர்களில் சுமார் 40 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் 40 வயதைக் கடந்தவர்கள். அவர்கள் தனியார் பள்ளிகளில் பணியாற்றி வருகின்றனர்.

அவர்களை ஆசிரியர் பணியில் நியமனம் செய்யும்போது அவர்களது அனுபவம் மாணவர்களை மெருகேற்றும். எனவே, ஆசிரியர் பணி நியமனத்துக்கு வயது வரம்பு நிர்ணயிக்கும் அரசாணையை தமிழக அரசு திரும்பப் பெற்று, ஏற்கெனவே ள்ள நடைமுறை மீண்டும் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x