Published : 10 Oct 2020 04:10 PM
Last Updated : 10 Oct 2020 04:10 PM

மன அழுத்தத்தைப் போக்கும் வகையில் கோவில்பட்டியில் காவலர்களுக்கு யோகா பயிற்சி

மன அழுத்தத்தை போக்கும் வகையில் கோவில்பட்டி காவல் உட்கோட்டத்துக்கு உட்பட்ட காவலர்களுக்கு யோகா பயிற்சி முகாம் நடந்தது.

கோவில்பட்டி 

மன அழுத்தத்தை போக்கும் வகையில் கோவில்பட்டி காவல் உட்கோட்டத்துக்கு உட்பட்ட காவலர்களுக்கு யோகா பயிற்சி முகாம் நடந்தது.

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தடுப்புப் பணியில் முன்கள வீரர்களாக பணியாற்றும் காவலர்களின் மன அழுத்தம் போக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் யோகா பயிற்சி கோவில்பட்டியில் நடந்தது.

கோவில்பட்டி காவலர் மைதானத்தில் நடந்த பயிற்சிக்கு டி.எஸ்.பி. கலைக்கதிரவன் தலைமை வகித்தார். அரசு இயற்கை மருத்துவர் திருமுருகன் யோகா செய்வதன் நோக்கம், நன்மைகள் குறித்து விளக்கினார். கோவில்பட்டி யோகாலயா பயிற்சி நிறுவனர் ஆர்.குணசேகரன் யோகா பயிற்சிகளை வழங்கினார்.

இதில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சூரிய நமஸ்காரம், சுவாச உறுப்புகள் பலம் பெறுவதற்கான தனுராசனம், முதுகு எலும்புகள் பலம் பெறுவதற்கான புஜங்காசனம், கபாலபதி பிராணாயாமம், மூச்சு பயிற்சி, சவாசனம் ஆகியவை செய்வதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டன.

யோகா பயிற்சியாளர் சூரியநாராயணன், காவல் ஆய்வாளர்கள் சுதேசன், அய்யப்பன், சுகாதேவி, பத்மாவதி, கஸ்தூரி, முத்து, ரோட்டரி துணை ஆளுநர் நாராயணசாமி, முன்னாள் துணை ஆளுநர்கள் விநாயாக ரமேஷ், ஜெயப்பிரகாஷ் நாராயணசாமி மற்றும் உட்கோட்டத்துககு உட்பட்ட உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x