Published : 07 Oct 2020 05:30 PM
Last Updated : 07 Oct 2020 05:30 PM
தமிழக ரேஷன்கடைகளில் பயோமெட்ரிக் முறையில் கைரேகை பதிவாகததால் பொருட்கள் வாங்க முடியாமல் குடும்ப அட்டைதாரர்கள் தவிக்கின்றனர்.
பொதுவிநியோகத் திட்டத்தில் ரேஷன்கடைகள் மூலம் இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, பருப்பு, மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன.
இதில் முறைகேடுகளைத் தடுக்க படிப்படியாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முதலில் ஸ்மார்ட் ரேஷன்கார்டுகள் வழங்கப்பட்டன.
தற்போது ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள குடும்ப உறுப்பினர் மட்டுமே பொருட்களை வாங்க முடியும்.
மேலும் அவர்கள் ரேஷன்கடைகளில் உள்ள மின்னணு கருவிகளில் தங்களது கைரேகையை பதிவு செய்தபிறகே பொருட்கள் விநியோகிக்கப்படும்.
ஆனால் பல இடங்களில் இணைய இணைப்பு சரியாக கிடைக்கவில்லை. இதனால் ஒருவருக்கு கைரேகை பதிவு செய்ய 15 முதல் 30 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. அதிலும் 50 வயதிற்கு மேற்பட்ட பலரது கைரேகை பதிவாகவில்லை. இதனால் அவர்கள் பொருட்கள் வாங்க முடியாமல் தவிக்கின்றனர்.
இதுகுறித்து சிவகங்கையைச் சேர்ந்த பிரபு கூறியதாவது: மின்னணு கருவிகளில் கைரேகை பதிவாகததால் பொருட்கள் வாங்குவதில் சிரமம் உள்ளது. பல இடங்களில் இணைய இணைப்பும் சரியாக கிடைப்பதில்லை.
ஏற்கெனவே ரேஷன்கடைகளில் பொருட்கள் வாங்க பல மணி நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டும். பயோமெட்ரிக் குழப்பத்தால் நாள் முழுவதும் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால் இப்பிரச்சினை தீரும் வரை பயோமெட்ரிக் முறையை நிறுத்தி வைக்க வேண்டும், என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT