Published : 06 Oct 2020 09:25 PM
Last Updated : 06 Oct 2020 09:25 PM
சிறுவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்க, தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என, வண்டியூர் விலக்கில் சிசிடிவி கேமரா திறப்பு விழாவில் துணை ஆணையர் சிவபிரசாத் தெரிவித்தார்.
மதுரை-திருமங்கலம் ரிங்ரோட்டில் வண்டியூர் விலக்கு அருகில் 4 ரோடுகள் பிரிகின்றன. இவ்விடத்தில் விபத்து மற்றும் குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில், வாகன எண்கள் மற்றும் பிற உருவங்களை துல்லியமாகப் பதிவிடும் அதிநவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்த அண்ணாநகர் காவல் உதவி ஆணையர் லில்லிகிரேஸ், ஆய்வாளர் பூமிநாதன் ஆகியோர் நடவடிக்கை எடுத்தனர்.
அவ்விடத்தில் நான்கு ரோடுகளையும் இணைக்கும் படியான கேமராக்கள் பொருத்தப்பட்டன. இதன் செயல்பாட்டை இன்று மாலை காவல் துணை ஆணையர் சிவபிரசாத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உதவி ஆணையர், லில்லிகிரேஸ், ஆய்வாளர் பூமிநாதன், உதவி ஆய்வாளர் ரீகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
துணை ஆணையர் கூறுகையில், ‘‘மதுரை நகரில் காவல் ஆணையர் உத்தரவின்பேரில், குற்றச் செயல்களைத் தடுக்க முக்கிய இடங் களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுகின்றன.
குறிப்பாக சிக்னல், சோதனை சாவடிகளில் நவீன கேமராக்கள் பொருத்துகி றோம். நகரில் கஞ்சா விற்பனை போன்ற சட்ட விரோத செயல் களில் ஈடுபடுவோரை துரிதமாக பிடிக்க, காவல் ஆய்வாளர்கள், தனிப்படை, டெல்டா படையினருக்கு உத்தரவிட்டுளோம்.
பல்வேறு குற்றச்செயல்களில் சிறுவர்கள் ஈடுபடு வதை தடுக்க, தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத் தப்படும். மீண்டும் பாய்ஸ் கிளப் செயல்பாடுக்கு கொண்டு வர முயற்சிக்கப்படும்.
மதுரை கூர்நோக்கு இல்லத்தில் ஏற்பட்ட பிரச்சினையில் 14 சிறுவர்களுக்கு சிறுகாயம் ஏற்பட்டுள்ளது. பிரச்னையில் ஈடுபட்ட16 சிறுவர்களை வேறு சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT