Published : 05 Oct 2020 11:32 AM
Last Updated : 05 Oct 2020 11:32 AM
மதுரை வடக்கு மாவட்ட திமுகவில் உருவாக்கப்பட்டுள்ள 15 ஊராட்சி ஒன்றியங்கள், மாநகர் விரிவாக்கப்பகுதி வார்டுகளுக்கு பொறுப்பாளர்களை திமுக தலைமை நியமித்துள்ளது.
மதுரை புறநகர் வடக்கு மாவட்ட திமுக.வில் நிர்வாக ரீதியாக ஊராட்சி ஒன்றியங்கள், வார்டுகள் பிரிக்கப்பட்டுள்ளன. இதன் புதிய பொறுப்பாளர்கள் பட்டியலை மாவட்டச் செயலாளர் பி.மூர்த்தி பரிந்துரையின்பேரில் திமுக தலைமை வெளியிட்டுள்ளது.
இதன் விவரம்: வடக்கு மாவட்ட திமுகவில் மதுரை கிழக்கு, மேற்கு, அலங்காநல்லூர், வாடிப்பட்டி, மேலூர், கொட்டாம்பட்டி என 6 ஒன்றியங்கள் இருந்தன. இவை கீழ்க்கண்டவாறு 15 ஒன்றியங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றின் செயலாளர்கள் விவரம்:
மதுரை கிழக்கு ஒன்றியம்- அ.பா.ரகுபதி, கிழக்கு ஒன்றியம் (வடக்கு)- எஸ்.மதிவாணன், கிழக்கு ஒன்றியம் (தெற்கு)-எஸ்.முகம்மது அப்துல்காதர் என்ற ஹக்கீம், மதுரைமேற்கு ஒன்றியம்-ச.தனசேகர், மதுரை மேற்கு (வடக்கு)-சி.சிறைச்செல்வன், அலங்காநல்லூர் கிழக்கு-ஆர்.கென்னடி என்ற கண்ணன்.
அலங்காநல்லூர் மேற்கு-எஸ்.பரந் தாமன், வாடிப்பட்டி வடக்கு- பால ராஜேந்திரன், வாடிப்பட்டி தெற்கு-கே.பசும்பொன்மாறன், மேலூர் கிழக்கு- ஆர்.பாலகிருஷ்ணன், மேலூர் வடக்கு- ஆர்.குமரன், மேலூர் தெற்கு-ராஜேந்திரபிரபு, கொட்டாம்பட்டி கிழக்கு-எஸ்.கிருஷ்ணமூர்த்தி, கொட்டாம்பட்டி மேற்கு-பழனி, கொட்டாம்பட்டி தெற்கு-ஜி.ராஜராஜன். பாலமேடு பேரூராட்சி பொறுப் பாளராக எம்.பாலகிருஷ்ணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதியில் இடம்பெற்றுள்ள மாநகராட்சி விரிவாக்கப் பகுதிகளான ஆனையூர், திருப் பாலை, கண்ணனேந்தல், வண்டியூர் ஆகிய பகுதிகளில் உள்ள வார்டுகள் பிரிக்கப்பட்டு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன் விவரம்: ஆனையூர் பகுதி-டி.எம்.பொம்மன், கண்ணனேந்தல் பகுதி-ப.கவுரிசங்கர், திருப்பாலை பகுதி-பி.சசிக்குமார், வண்டியூர் பகுதி-எம்.பாண்டிய ராஜா.
வண்டியூர் பகுதி வார்டு 29-என்.வெங்கடேசன், வார்டு 32-என்.குமரன், திருப்பாலை வார்டு 24-எம்.ராமமூர்த்தி, வார்டு 24(அ)-பொன். பாலகிருஷ்ணன், திருப்பாலை பகுதி வார்டு 48-எம்.செந் தில்குமார், வார்டு-49-ஏ.லட்சுமணன், கண்ணனேந்தல் வார்டு 25- எஸ்.வி. மணிராஜ், வார்டு 26-எஸ்.செங்கிஸ்கான், வார்டு-28-சே.தனராஜ், ஆனையூர் பகுதி 3-வது வார்டு-எஸ். கொடி வைரன், ஆனையூர் 3 (அ) வார்டு-சி.கணேசன், ஆனையூர் 2-வது வார்டு-பி.பாபு, ஆனையூர் 4-வது வார்டு-வி.முருகேசன், ஆனையூர் 4(அ) வார்டு-க.ஏ.நவநீதகிருஷ்ணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய ஒன்றியங்கள், வார்டுகள் அனைத்துக்கும் தலா 9 முதல் 11 பேர் அடங்கிய பொறுப்புக்குழுவும் தனியாக நியமிக்கப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT