Published : 05 Oct 2020 10:40 AM
Last Updated : 05 Oct 2020 10:40 AM
உளுந்தூர்பேட்டையில் குடிசை வீட்டுக்கு மின் கட்டணமாக ரூ.6 ஆயிரம் வந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. ஆனால், இது தவறான தகவல் என மின்வாரிய அதிகாரிகள் மறுத் துள்ளனர்.
உளுந்தூர்பேட்டை அடுத்த உளுத்தாண் டார்கோயில் பகுதியைச் சேர்ந்தவர் சரஸ் வதி (67). மீன் வியாபாரம் செய்து வருகிறார்.இவர் தனது மகள் மற்றும் பேரப்பிள்ளைக ளுடன் குடிசை வீட்டில் வசித்து வருகிறார். இவரது வீட்டில் மிகக் குறைந்த அளவி லான மின்பயன்பாடு சாதனங்களே உள்ளன.மின்விசிறி, குழல் விளக்குகள், தொலைக்காட்சி பெட்டி உள்ளிட்டவையே பிரதானமாக உள் ளன. எனவே கடந்த காலங்களில் இவர் தலாரூ.250 வரையே மின்கட்டணம் செலுத்தி வந்துள்ளார்.
கடந்த இரு மாதங்களுக்கு முன் அவர் மின்கட்டணமாக ரூ.4,345 செலுத்தியுள்ளார். இவருக்கு, கடந்த ஆகஸ்டு மற்றும் செப் டம்பர் மாதத்திற்கான மின் கட்டணமாக தற்போது ரூ.6 ஆயிரம் செலுத்தக் கோரி ரசீது கொடுக்கப்பட்டுள்ளது. அதிர்ச்சியடைந்த அவர் நேற்று முன்தினம் உளுந்தூர்பேட்டை மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று மனு அளித்தார். தனது மின் கணக்கீட்டில் குளறுபடி உள்ளது. மின் மீட்டரை மாற்றித் தருமாறு மனு அளித்துள்ளார்.
இதுதொடர்பாக மின்வாரிய உதவி செயற் பொறியாளரிடம் விசாரித்தபோது," முற்றிலும் தவறான தகவல். அந்த மூதாட்டியின் மின் பயன்பாட்டுக்கான கட்டணம் ரூ. 1,120 மட்டுமே. ஆனால், அவர் எப்படி ரூ.6 ஆயிரம் எனக் கூறுகிறார் என்பது தெரியவில்லை" என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT