Published : 03 Oct 2020 07:36 AM
Last Updated : 03 Oct 2020 07:36 AM

வேளாண் மசோதாக்களை திரும்பப் பெற வேண்டும்: செங்கை, காஞ்சி மாவட்டங்களில் திமுக மக்கள் சபை கூட்டத்தில் தீர்மானம்

காஞ்சிபுரம் தம்மனூர் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர்.

செங்கை/காஞ்சி/திருவள்ளூர்

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் திமுகவினர் நடத்திய மக்கள் சபை கூட்டங்களில், வேளாண் சட்டமசோதாக்களை திரும்பப்பெற வலியுறுத்தி தீர்மானங்கள் இயற்றப்பட்டன. மேலும் கிராமசபை கூட்டத்தை ரத்து செய்ததை கண்டித்தும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரை அடுத்த முட்டுக்காடு ஊராட்சிமன்ற அலுவலகம் எதிரே திருப்போரூர்தொகுதி திமுக எம்எல்ஏ இதயவர்மன் தலைமையில், காந்தி ஜெயந்தியை யொட்டி மக்கள் சபை நடைபெற்றது. இதில், திமுக நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர்.

மேலும், கூட்டத்தில் மத்திய அரசின் புதிய வேளாண் மசோதாக்களை திரும்பப் பெற வலியுறுத்தி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதேபோல், நாவ லூர் ஊராட்சியில் மக்கள் சபை கூட்டம் நடைபெற்றது.

திருக்கழுக்கழுக்குன்றம் ஒன்றியம் புதுப்பட்டினம் ஊராட்சி மன்ற அலுவல கம் முன்பு, கிராமசபை கூட்டம் ரத்து செய்யப்பட்டதை கண்டித்து, தெற்கு மாவட்ட திமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.

காஞ்சிபுரத்தில்..

காஞ்சிபுரம் மாவட்டம், தம்மனூர் ஊராட்சியில் காஞ்சி தெற்கு மாவட்ட திமுக செயலர் சுந்தர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் பலர் பங்கேற்றனர். காஞ்சி் தெற்கு மாவட் டத்தின் பல்வேறு ஊராட்சிகளிலும் இது போல் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

திருவள்ளூரில்..

காவேரிராஜபுரம், புதிய எருமை வெட்டிப்பாளையம், பழைய எருமை வெட்டிப்பாளையம் ஊராட்சிகளில் நடைபெற்ற மக்கள் சபை கூட்டத்தில், திருவள்ளூர், மாதவரம் எம்எல்ஏக்கள் வி.ஜி.ராஜேந்திரன், சுதர்சனம் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி தீர்மானம் நிறைவேற்றினர்.

அம்மையார்குப்பம் ஊராட்சியில், ஊராட்சி தலைவர் ஆனந்தி செங்குட்டுவன், கவரப்பேட்டையில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட திமுக செயலர் வேணு, மீஞ்சூர் - தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில் ஒன்றியச் செயலர் ரமேஷ் உள்ளிட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x