Published : 02 Oct 2020 11:46 AM
Last Updated : 02 Oct 2020 11:46 AM
தஞ்சாவூரில் முகக்கவசம் அணி யாமல் வரும் வாகன ஓட்டிகளை மாநகராட்சி அதிகாரிகள் பிடித்து, அபராதம் விதித்து, அதேஇடத்தில் கரோனா பரிசோதனை செய்யும் திட்டத்தை ஆட்சியர் ம.கோவிந்த ராவ் நேற்று தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 11,194 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, 9,503 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இருப்பினும், முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை முறையாக பின்பற்றாமல் இருப்பது போன்றவற்றால், மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் அதிகமாகி வருகிறது. இதையடுத்து, மாநகர் பகுதிகளில் முகக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கு, ரூ.200 அபராதமும் விதிக்கப்பட்டு, முகக்கவசம் ஒன்றையும் மாநகராட்சி அதிகாரி கள் வழங்கி வந்தனர்.
இருப்பினும், பல வாகன ஓட்டிகள் முககவசம் அணியாமல் சுற்றி வந்தால், அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில், பிடிபடும் வாகன ஓட்டிகளுக்கு அதே இடத்திலேயே நடமாடும் பரிசோதனை வாகனத் தில் கரோனா பரிசோதனை செய்யும் திட்டத்தை நேற்று ஆட்சியர் கோவிந்தராவ் தொடங்கி வைத்தார். இதில் மாநகராட்சி ஆணையர் பு.ஜானகிரவீந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண் டனர்.
இதுகுறித்து ஆட்சியர் கூறியதா வது: தஞ்சாவூர் மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் சுற்றிய 11 ஆயிரம் பேரிடம் இருந்து ரூ.23 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
தற்போது, அபராதம் விதிக்கப்படும் அதே இடத்தில் கரோனா பரிசோதனை செய்யப்படுவதால், இதைப் பார்ப்பவர்கள் முகக்கவசம் அணிய முற்படுவார்கள். ஒரே நாளில் 30-க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் மாவட்டம் முழுவதும் அமல்படுத்தப்படுகிறது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT