Published : 02 Oct 2020 07:46 AM
Last Updated : 02 Oct 2020 07:46 AM
தஞ்சாவூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால், கொள்முதல் நிலையங்களில் விற்பனைக்காக நெல்லுடன் காத்திருந்தவிவசாயிகள் ஏமாற்றமடைந்தனர்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து, நெல் கொள்முதல் செய்து இந்திய உணவுக் கழகத்துக்கு வழங்குவது வழக்கம். இந்த, சந்தைப்படுத்தும் பருவம் அக்.1-ம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு செப்.30-ம் தேதி நிறைவடையும்.
காரீப் கொள்முதல் பருவம்எனப்படும் இப்பருவத்தின்போது தான் விவசாயிகளின் நெல்லுக்கு புதிய விலையும், ஆதார விலையும் சேர்த்து வழங்கப்படும். அதேபோல கொள்முதல் இலக்கு, நடைமுறைகள் அனைத்தும் நிர்ணயிக்கப்பட்டு அதற்கு ஏற்றாற்போல பணிகள் தொடங்கும்.
தஞ்சாவூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை குறுவை சாகுபடி நிகழாண்டு முன்கூட்டியே தொடங்கிவிட்டது. வழக்கமாக அக்டோபரில் தொடங்க வேண்டிய அறுவடை, நிகழாண்டு செப்டம்பர் மாதமே தொடங்கியதால் 166 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு கொள்முதல் பணிகள் நடைபெற்றன.
இதையடுத்து, கொள்முதல்பருவ ஆண்டின் இறுதிக் கணக்குகளை முடிக்க வேண்டும் என்பதால் கடந்த செப்.25-ம் தேதியுடன் 166 கொள்முதல்நிலையங்களிலும் நெல் கொள்முதல் பணிகள் நிறுத்தப்பட்டன. அக்.1-ம் தேதி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
2 ஆயிரம் மூட்டைகள்
இதனால், அக்.1-ம் தேதி கொள்முதல் நிலையங்கள் திறந்துவிடும் என்ற நம்பிக்கையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தஞ்சாவூர் அருகே கொல்லாங்கரை, மருங்குளம், கா.கோவிலூர், அம்மாபேட்டை, கொக்கேரி, சாலியமங்கலம் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அறுவடை செய்தநெல்லை விற்பனை செய்வதற்காக கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டுவந்து குவியல் குவியலாக குவித்து வைத்துள்ளனர். ஒவ்வொரு கொள்முதல் நிலையங்களிலும் 2 ஆயிரம் மூட்டைக்கு குறையாமல் நெல் உள்ளதால் விரைந்து கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து கொல்லாங்கரை விவசாயி சுகுமார் கூறியபோது, “எங்கள் பகுதியில் 10 கிராமங்களில் சுமார் 1,200 ஏக்கரில் அறுவடைசெய்த நெல்லை கொள்முதல் நிலையத்தில் குவித்து வைத்துள்ளோம். அக் 1-ம் தேதி புதிய விலையுடன் கொள்முதல் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், இன்று கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை. இந்நிலையில்,கடந்த சில தினங்களாக மழை பெய்வதால் நெல்மணிகள் நீரில் நனைந்து முளைக்கத் தொடங்கியுள்ளன. இதனால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்” என்றார்.
விரைவில் 226 நிலையங்கள்
இதுகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலைமண்டல மேலாளர் சிற்றரசு கூறியபோது, “கடந்த காரீப் சந்தைப் பருவத்தில் 7 லட்சத்து 72 ஆயிரத்து 11 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே செயல்பட்ட 166 கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல் மூட்டைகளை அங்கிருந்து கிடங்குகளுக்கு இயக்கம் செய்தபின், புதிய கொள்முதல் தொடங்கப்படும். 166 கொள்முதல் நிலையங்களுடன் புதிதாக 60 கொள்முதல் நிலையங்கள் என மொத்தம் 226 கொள்முதல் நிலையங்களைத் திறக்க ஆணை வழங்கப்பட்டுள்ளது.
புதிய விலையில் கொள்முதல்
புதிய விலையாக குவிண்டாலுக்கு சன்ன ரகத்துக்கு ரூ.1,905-ல்இருந்து ரூ.1,958 எனவும், பொதுரகத்துக்கு ரூ.1,865-ல் இருந்துரூ.1,918 எனவும் உயர்த்தப்பட்டுஉள்ளது. இந்த விலையை நெட்வொர்க்கில் ஏற்றிய பின்னர் கொள்முதல் பணி தொடங்கும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...