Published : 29 Sep 2020 09:03 PM
Last Updated : 29 Sep 2020 09:03 PM
சக்கம்பட்டி சலவை மற்றும் சாயப்பட்டறைகள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
தேனி மாவட்டம் சக்கம்பட்டியில் சேலை, வேட்டிகள் பாரம்பரியமாக நெய்யப்பட்டு வருகிறது. இதைச் சார்ந்து சலவை மற்றும் சாயப்பட்டறைகள் இயங்குகிறது.
நெய்த வேட்டிகளின் ஓரங்களில் வண்ணங்களில் கரை போடுதல், அயர்ன் செய்து விற்பனைக்கு தயார் செய்தல் இவற்றின் பணியாகும்.
இந்நிலையில் சாயப்பட்டறையினால் சுற்றுச்சூழல் பாதிக்கிறது என்று அடிக்கடி தனிநபர் ஒருவர் புகார் தருவதால் மாசுகட்டுப்பாட்டு வாரியம் மூலம் தங்களுக்கு நெருக்கடி ஏற்படுகிறது என்று தொழிலாளர்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
இதனைக் கண்டித்து நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தொழிலாளர்கள் கூறுகையில், குடிசைத்தொழிலாக 18பட்டறைகள் செயல்படுகிறது.
சுத்திகரிப்புநிலையம் அமைக்கும் அளவிற்கு இடம், பொருளாதார வசதி இல்லை. எனவே இதற்கு விலக்கு அளிக்க வேண்டும். பெண்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்பு உள்ளது. எனவே அரசு தலையிட்டு நிரந்தர தீர்வு அளிக்க வேண்டும் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT