Published : 26 Sep 2020 02:56 PM
Last Updated : 26 Sep 2020 02:56 PM
மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரையில் மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்தியத் திரையுலகின் முன்னணிப் பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர் சிகிச்சை காரணமாக கடந்த 4-ம் தேதி அவர் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார்.
கரோனா தொற்று நீங்கினாலும், நுரையீரல் தொற்று அதிகரித்துக் கொண்டே இருந்தது. மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவால் உறுப்புகளின் செயல்பாடு குறைந்து உடல்நிலை மேலும் மோசமடையத் தொடங்கியது.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை நண்பகல் 1.04 மணிக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உயிர் பிரிந்தது.
மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில் சனிக்கிழமை காலை மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
கலை இலக்கிய பெருமன்ற செயலாளர் மோகன்தாஸ் தலைமை வகித்தார். தமிழ்நாடு ஏஐடியுசி மீனவர் சங்க மாநில செயலாளர் சி.ஆர்.செந்தில்வேல், நிர்வாகிகள் மிருத்துன்ஜெயன் இரா.கண்ணன் முகவைமுனீஸ், வெங்கடேஷ் ஜி.பாண்டி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக அக்னி தீர்த்தக் கடற்கரையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியனின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT