Published : 25 Sep 2020 07:12 PM
Last Updated : 25 Sep 2020 07:12 PM
வேளாண் திருத்த மசோதாக்களை ரத்து செய்ய வலியுறுத்தி திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மறியலில் ஈடுபட்ட அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
அனைத்து தொழிற்சங்கள் கூட்டமைப்பு சார்பில் திருநெல்வேலி வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் சிலை அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் காசிவிஸ்வநாதன் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
தொமுச பேரவை பொது செயலாளர் தர்மர் , சிஐடியூ மாவட்ட செயலாளர் மோகன் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் பாஸ்காரன் , அகில இந்திய விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ராஜகுரு, உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தால் திருநெல்வேலி- பாளையங்கோட்டை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனையடுத்து மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதுபோன்று திருநெல்வேலி மாவட்டத்தில் வள்ளியூர் , களக்காடு , அம்பாசமுத்திரம் ஆகிய இடங்களிலும் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த மறியல் போராட்டங்களில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT