Last Updated : 25 Sep, 2020 12:23 PM

 

Published : 25 Sep 2020 12:23 PM
Last Updated : 25 Sep 2020 12:23 PM

நூறு சதவீத பேருந்துகள் இயக்குவது எப்போது? - பேரிகேட் பணியால் சிரமப்படும் ஓட்டுநர், நடத்துநர்கள்

பெரியார் பஸ் நிறுத்தத்தில் பேருந்துகளுக்கு இடையூறாக நிற்கும் ஆட்டோக்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ள ஓட்டுநர். படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை

தமிழகத்தில் கரோனா ஊரடங்கால் 40 சதவீத அரசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. பணி கிடைக்காத ஓட்டுநர், நடத்துநர்கள் ‘பேரிகேட் பணி’யை சிரமப்பட்டு மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் கரோனா ஊரடங்கால் 5 மாதங்களுக்கும் மேலாக அரசு பேருந்துகள் இயக்கு வது நிறுத்தப்பட்டது. கடந்த ஜூன் மாதம் மண்டலங்களுக்கு இடையே பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கப்பட்டது. கரோனா பரவல் அதிகரித்ததையடுத்து பேருந்து சேவை திடீரென நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் செப்.1 முதல் மாவட்டங்களுக்குட்பட்ட பகுதியி லும், செப்.7 முதல் மாநிலத்துக்குள்ளும் அரசு பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி வழங்கி யது. இருப்பினும் மொத்த பேருந்து களில் 40 சதவீத பேருந்துகளை மட்டுமே இயக்க வேண்டும், ஒரு பேருந்தில் 60 சதவீத பயணிகளை மட்டுமே ஏற்ற வேண்டும் என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

ஒவ்வொரு போக்குவரத்துக் கழகத்திலும் 40 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப் படுவதால் அனைத்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கும் பணி கிடைப்பதில்லை. தொலை தூர ஊர்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளில் பணிபுரிந்த ஓட்டுநர், நடத்துநர்களுக்கு ஒருநாள்விட்டு ஒரு நாள் பணி வழங்கப்படுகிறது.

நகர் பேருந்துகளை இயக்கி வந்த ஓட்டுநர், நடத்துநர்களில் பேருந்து பணி கிடைக்காதவர்கள் ‘பேரிகேட் பணி’க்கு அனுப்பப்படுகின்றனர். பேருந்து நிலையங்கள், பேருந்து நிறுத்தங்களில் நின்று பேருந்து களை ஒழுங்குபடுத்துவது, பேருந்துகளின் எண்களை குறித்து வைத்துக் கொள்வது, சமூக இடைவெளியைப் பின் பற்றி பயணிகள் பேருந்தில் ஏறுவதை உறுதி செய்வது, பேருந்து நிறுத்தத்தை ஆக்கி ரமித்து பேருந்துகளுக்கும், பயணிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தும் ஷேர் ஆட்டோக்களை விரட்டியடிப்பது ஆகியவைதான் ‘பேரிகேட் பணி’ ஆகும்.

ஒவ்வொரு பேருந்து நிறுத் தங்களிலும் ஓட்டுநர், நடத்துநர்கள் 4 பேர் பேரிகேட் பணிக்கு நிறுத் தப்படுகின்றனர். இவ்வளவு நாள் பேருந்துகளில் பணிபுரிந்த இவர் கள் பேரிகேட் பணி மேற்கொள்ள சிரமப்படுகின்றனர். இதனால் நூறு சதவீத பஸ்களை இயக்கி அனைத்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கும் பணி வழங்க வேண்டும் என வலி யுறுத்தியுள்ளனர்.

இது குறித்து மதுரை மண்டல சிஐடியூசி பொதுச் செயலர் கனகசுந்தர் கூறியதாவது: பேருந்துகளை இயக்குவதற்கு ஓட்டுநர்கள், நடத்துநர்கள் தயா ராக இருக்கிறோம். ஒட்டுநர், நடத்துனர்கள் தினமும் பணிக்கு வருகின்றனர். பேருந்து பணி கிடைக்காதவர்களுக்கு பேரிகேட் பணி தரப்படுகிறது. இப்பணியில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. வயதானவர்களால் நீண்ட நேரம் நின்று பணி செய்ய முடிய வில்லை. பேருந்து நிறுத்தங் களை ஆக்கிரமிக்கும் ஷேர் ஆட்டோக்களை விரட்டுவது போன்ற போலீஸார் செய்ய வேண்டிய பணியையும் நாங்கள் செய்ய வேண்டி உள்ளது.

நூறு சதவீத பேருந்துகளை இயக்கினால் அனைவருக்கும் பணி கிடைக்கும். போக்குவரத்துக் கழ கத்துக்கு வருவாய் அதிகரிக்கும். எனவே நூறு சதவீத பஸ்களை இயக்க அரசு அனுமதி வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x