Published : 25 Sep 2020 11:43 AM
Last Updated : 25 Sep 2020 11:43 AM

நெல்லை டவுன் ரதவீதிகளில் கழிவு நீரோடைகள் தூர்வாரப்படுமா?

திருநெல்வேலி டவுன் ரதவீதியில் சந்திப்பிள்ளையார் கோயில் அருகே நிரம்பியிருக்கும் கழிவு நீரோடை. படம்: மு.லெட்சுமி அருண்.

திருநெல்வேலி

`திருநெல்வேலி டவுன் ரதவீதிகளில் கழிவு நீரோடைகளை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று, `இந்து தமிழ்’ நாளிதழின் `உங்கள் குரல்’ பகுதியில் வாசகர் ஒருவர் வலியுறுத்தினார். `வடகிழக்கு பருவமழை காலத்து க்குமுன் இந்த பணிகளை மேற்கொண்டால், தண்ணீர் நிரம்பி சாலையில் வழிவதைத் தடுக்க முடியும்’ என்றும் அவர் குறிப் பிட்டார்.

திருநெல்வேலி மாநகராட்சியில் கழிவு நீரோடைகள் ஆக்கிரமிப்பு, கால்வாய்கள் தூர்ந்து போயிருப்பது, முறையான கழிவு நீரோடை இல்லாதது, கழிவு நீரோடைகள் நிரம்பி வழிவது போன்ற பிரச்சினைகள் தீர்வில்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. கோடிக்கணக்கில் செலவிட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் மாநகராட்சி நிர்வாகம், கழிவு நீரோடைகளை தூர்வாரி மழைக் காலத்துக்குமுன் தயார்படுத்தி வைக்க வேண்டும் என்று, அந்தந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

திருநெல்வேலி டவுனில் நெல்லையப்பர் கோயிலைச் சுற்றியுள்ள ரதவீதிகளில் சாலையோர கழிவு நீரோடை கள் தூர்வாரப்படாமல் நிரம்பி யிருப்பதை தற்போதும் பார்க்க முடிகிறது. இதேநிலை தொடர்ந் தால் வடகிழக்கு பருவமழை காலத்தின்போது இந்த கழிவு நீர் கால்வாய்கள் நிரம்பி ரதவீதிகளிலும், அருகிலுள்ள குடியிருப்புகளில் தாழ்வான இடங் களிலும் கழிவு நீர் வழிந்தோடும் அபாயம் இருக்கிறது.

ரதவீதிகளில் உள்ள சில உணவகங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதாகவும் வியாபாரிகள் குற்றஞ்சாட்டு கிறார்கள். அந்தவகையில், நெல்லையப்பர் கோயிலுக்கு முன்புள்ள மண்டபம் அமைந் துள்ள இடத்தில் கழிவு நீர் தேங்கியிருப்பதால் கோயிலுக்கு வரும் பக்தர்களும், கடைகளுக்கு வரும் பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ரதவீதிகளில் கடந்த பல ஆண்டுகளாகவே சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. இதனால், சாலையின் உயரம் அதிகரித்து வருகிறது.

அதேநேரத்தில் அதையொட்டிய கால்வாய்கள், கடைகள் தாழ்ந்து காணப்படுகின்றன. இதனால், மழைக்காலங்களில் தண்ணீர் புகுந்துவிடுவதாகவும் சிலர் தெரிவித்தனர்.

பிரசித்தி பெற்ற திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் ரதவீதிகளில் கழிவு நீரோடைகளை தூர்வாரி செப்பனிடவும், சுகாதார சீர்கேட்டை தடுக்கவும் சம்பந்தப்பட்ட அரசுத்துறைகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி வியாபாரிகள், பக்தர்கள், பொதுமக்களின் கோரிக்கையாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x