Published : 24 Sep 2020 11:54 AM
Last Updated : 24 Sep 2020 11:54 AM
தமிழகத்தில் 26 மாவட்டங்களில் வடகிழக்குப் பருவமழை சராசரியாகப் பெய்யும் என்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகக் காலநிலை ஆராய்ச்சி மையம் முன்னறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மாதங்கள் வடகிழக்குப் பருவமழைக் காலமாகும். நடப்பு ஆண்டில் வடகிழக்குப் பருவமழை குறித்து முன்னறிவிப்பு வெளியிடுவதற்காக, கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகக் காலநிலை ஆராய்ச்சி மையம், பல்கலைக்கழகப் பயிர் மேலாண்மை இயக்ககத்தில் மேற்கொண்ட ஆய்வில் 26 மாவட்டங்களில் சராசரியாக மழை பொழியும் என்றும், 5 மாவட்டங்களில் அதிக மழைப்பொழிவுக்கு வாய்ப்புள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
இது குறித்துக் கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகக் காலநிலை ஆராய்ச்சி மையத் தலைவர் எஸ்.பி.ராமநாதன் வெளியிட்டுள்ள வடகிழக்குப் பருவமழைப் பொழிவு குறித்த முன்னறிவிப்பு விவரம்:
''வடகிழக்குப் பருவமழைப் பொழிவு குறித்துக் கண்டறிய கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பசிபிக் பெருங்கடலில் பூமத்திய ரேகையையொட்டிள்ள கடற்பகுதியின் மேற்பரப்பு நீரின் வெப்பநிலை மண்டலக் காற்றழுத்தம் 'மழை மனிதன்' என்ற கணினிக் கட்டமைப்பைக் கொண்டு ஆராயப்பட்டது.
அதில் சென்னை, கோவை, அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, நாகை, நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, திருவள்ளூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், திருவண்ணாமலை, விழுப்புரம், விருதுநகர் ஆகிய 26 மாவட்டங்களில் சராசரியாக மழை பொழியும் என்று தெரியவந்தது.
காஞ்சிபுரம், மதுரை, திருச்சி, திருவாரூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் சராசரிக்கும் அதிகமாக மழை பொழியும் என்றும், நீலகிரி மாவட்டத்தில் சராசரியையொட்டிப் பெய்யும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
மாவட்டம் வாரியாக எதிர்பார்க்கப்படும் மழையளவும், சராசரி மழையளவும்:
அரியலூர் 580 மி.மீ.-578.3 மி.மீ., சென்னை 770 மி.மீ.-761.6 மி.மீ., கோவை 318 மி.மீ.-343.8 மி.மீ., கடலூர் 683 மி.மீ.-704.6 மி.மீ., தருமபுரி 337 மி.மீ.-327.6 மி.மீ., திண்டுக்கல் 479 மி.மீ.-470.2 மி.மீ., ஈரோடு 280 மி.மீ.-308.4 மி.மீ., காஞ்சிபுரம் 959 மி.மீ.-689.3 மி.மீ., கன்னியாகுமரி 528 மி.மீ.-523.9 மி.மீ., கரூர் 317 மி.மீ.-309.7 மி.மீ., கிருஷ்ணகிரி 282 மி.மீ.-289.8 மி.மீ., மதுரை 481 மி.மீ.-418.8 மி.மீ., நாகை 907 மி.மீ.-932.2 மி.மீ., நாமக்கல் 290 மி.மீ.-293.2 மி.மீ., பெரம்பலூர் 451 மி.மீ.-467.7 மி.மீ., புதுக்கோட்டை 445 மி.மீ.-410.5 மி.மீ., ராமநாதபுரம் 503 மி.மீ.-523.1 மி.மீ., சேலம் 351 மி.மீ.-359.0 மி.மீ., சிவகங்கை 461 மி.மீ.-423.7 மி.மீ., தஞ்சாவூர் 601 மி.மீ.-593.7 மி.மீ., நீலகிரி 413 மி.மீ.-477.2 மி.மீ., தேனி 331 மி.மீ.-363.9 மி.மீ., திருநெல்வேலி 439 மி.மீ.-473.0 மி.மீ., திருவள்ளூர் 831 மி.மீ.-742.1 மி.மீ., திருவண்ணாமலை 502 மி.மீ.-460.0 மி.மீ., திருவாரூர் 831 மி.மீ.-742.1 மி.மீ., திருப்பூர் 325 மி.மீ.-318.4 மி.மீ., திருச்சி 455 மி.மீ.-394.2 மி.மீ., தூத்துக்குடி 390 மி.மீ., 427.7 மி.மீ., வேலூர் 409 மி.மீ.-364.5 மி.மீ., விழுப்புரம் 487 மி.மீ.-509.1 மி.மீ, விருதுநகர் 424 மி.மீ.-395.2 மி.மீ. மழை பொழியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது''.
இவ்வாறு எஸ்.பி.ராமநாதன் முன்னறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT