Published : 24 Sep 2020 09:34 AM
Last Updated : 24 Sep 2020 09:34 AM
ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தைகளை மீட்பதற்கான நூதன கருவியை நாகை மாவட் டம் வேளாங்கண்ணியைச் சேர்ந்த ஆட்டோ மெக்கானிக் ஒருவர் வடிவமைத்துள்ளார்.
10-ம் வகுப்பு வரை படித்துள்ள, ஆட்டோ பழுது நீக்கம் செய்யும் டிங்கரிங் ஒர்க்ஷாப் நடத்திவரும் லெனின் என்கிற நாகேந்திரன்(40) கடந்த 5 மாதங்களாக தீவிரமாக முயற்சி மேற்கொண்டு, இதற்காக 6 விதமான கருவிகளை வடிவமைத் துள்ளார்.
தன் கண்டுபிடிப்பு குறித்து செய்தியாளர்களிடம் லெனின் கூறியதாவது: ஆழ்துளைக் கிணற்றில் குழந்தை விழுந்தவுடன் ஒரு கருவியை பக்கவாட்டில் செலுத்தி, குழந்தை மேலும் கீழே இறங்காமல் தடுக்க வேண்டும். பின்னர் கைகள் போன்ற மீட்புக் கருவியை உள்ளே செலுத்தி குழந்தையின் தலை பாகத்தை இறுகப் பிடித்தவாறு குழந்தையை மேலே தூக்க வேண்டும்.
இந்த கருவியில் சென்சார் உதவியுடன் ஒளிரும் எல்இடி பல்புடன் கூடிய கேமரா பொருத் தப்பட்டு உள்ளது. இதனால் ஆழ்துளைக் கிணற்றின் உள்ளே உள்ள குழந்தையின் வடிவம் எவ் வாறு உள்ளது என்பதை அறிந்து கொண்டு அதற்கேற்ற கருவியின் உதவியுடன் குழந்தையை மீட்க லாம். குழந்தை நேராக விழுந்திருந் தாலும், தலைகீழாக விழுந்திருந் தாலும், கைகளை தலைக்கு மேல் தூக்கியவாறு விழுந்திருந்தாலும் குழந்தையை உயிருடன் மீட்பதற் காக 6 விதமான கருவிகளை வடி வமைத்துள்ளேன். இக்கருவியின் உதவியுடன் குழந்தைக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லாமல் எளிதாக மீட்கமுடியும்.
இந்த கருவியை 10 அங்குலம் சுற்றளவு வரை விரிக்க முடியும். இதன் மூலம் சுமார் 7 கிலோ முதல் 10 கிலோ வரை எடையுள்ள குழந்தையை மீட்க முடியும். இந்த கருவியை வடிவமைக்க ரூ.20 ஆயிரம் செலவானது.
இந்த கருவியை மத்திய, மாநில அரசுகள் அங்கீகரித்து, நிதியுதவி அளித்தால் தொழில்நுட்ப உதவியுடன் மேலும் மேம்படுத்த முடியும் என்று அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT