Published : 22 Sep 2020 07:27 AM
Last Updated : 22 Sep 2020 07:27 AM
பயணிகளின் தேவை அடிப்படையில் மற்ற மெட்ரோ ரயில்நிலையங்களுக்கும் மின்சாரஇருசக்கர வாடகை வாகனவசதி விரிவாக்கம் செய்யப்படும் என மெட்ரோ ரயில்அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக சென்னைமெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறும்போது, ‘‘சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தனியார் நிறுவனத்துடன்இணைந்து மின்சார இருசக்கர வாகன வசதியை ஆலந்தூர், வட பழனி, திருமங்கலம் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களில் அறிமுகம் செய்துள்ளது.
செல்போன் செயலி
இந்த வசதியை பயன்படுத்த பயணிகள் தங்களது செல்போனில் ‘Howdy Hire Bikes’ என்ற செயலியை பதிவிறக்கம் செய்து ஏறும், மற்றும் இறங்கும் இடத்தை தேர்ந்தெடுக்கலாம் அதன்பின்னர், அதில் வரும் கியூ ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்தால் உடனடியாக வாகன வசதி கிடைக்கும். சென்னைக்குள் ஒவ்வொரு 500 மீட்டர் தொலைவிலும் இது அமைக்கப்பட்டுள்ளதால் பயணிகளிடம் வரவேற்பு கிடைத்துவருகிறது.
ஒவ்வொரு கி.மீட்டருக்குரூ.3 மற்றும் நிமிடத்துக்கு10 பைசா மட்டுமேவாடகை கட்டணம் வசூலிக்கப்படும். பயணிகளின் தேவையை அடிப்படையாக கொண்டு மேலும், பல்வேறு மெட்ரோ ரயில் நிலையங்களுக்கும் விரிவாக்கம் செய்ய ஆலோசனை நடைபெற்று வருகிறது.’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT