Published : 26 Sep 2015 01:59 PM
Last Updated : 26 Sep 2015 01:59 PM
தென்மேற்கு பருவ மழை பொய்த்து போனதாலும், தமிழகத்துக்கு தர வேண்டிய தண்ணீரை கர்நாடகம் வழங்க மறுத்து விட்டதாலும், நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்ட டெல்டா பாசன விவசாயிகள் பயிரை எப்படி காப்பாற்றுவது என்ற கவலைக்கு உள்ளாகியிருக்கின்றனர். மேட்டூர் தண்ணீரை நம்பி டெல்டா மாவட் டத்தில் உள்ள 12 லட்சம் ஏக்கரில் சம்பா நெல் விதைப்பது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ம் தேதி மேட்டூரில் தண்ணீர் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் சாகுபடி தயாராவர்.
ஆனால் கடந்த 5 வருடங்களாக குறிப்பிட்ட தேதிதியில் மேட்டூரில் தண்ணீர் திறக்கப்படுவதில்லை. அது இந்த வருடமும் தொடர்ந் துள்ளது. இதனால், திருச்சியில் தொடங்கி சிதம்பரம் வரை உள்ள டெல்டா விவசாயிகள் இனி நெல் மற்றும் கரும்பு பயிரிட சற்றே யோசிக்கவேண்டிய தருணம் வந்தாகிவிட்டதாக கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக காவிரி டெல்டா பாசன விவசாயிகள் பாதுகாப்புச் சங்க மாநிலத் துணைத் தலைவரும், பாஜக விவசாய பிரிவு தேசிய ஆலோசனைக் குழு உறுப்பினருமான கண்ணன் பிள்ளை கூறியது:
முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த வருடம் வெயில் வாட்டி வதைக்கிறது. நமக்கு தண்ணீர் வழங்க கூடிய கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களிலும் மழை குறைவு. எனவே அந்த மாநிலங்கள் மழையின் அளவைக் காரணம் காட்டி தண்ணீர் தர மறுத்து விட்டது. செப்டம்பர் மாதம் இறுதியை எட்டிய நிலையிலும் தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை பெய்யவில்லை. இதுபோன்ற காரணங்களால் மேட்டூரில் இருந்தும் போதிய தண்ணீர் திறக்க முடியாத நிலையில் அரசு உள்ளது. தென்மேற்கு பருவமழை, மேட்டூர் தண்ணீரை நம்பி நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்ட டெல்டா விவசாயிகள் தற்போதும் தவிப்புக் குள்ளாகியிருக்கிறார்கள்.
தற்போது, மேட்டூரிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு 13 ஆயிரம் கன அடி மட்டுமே. இந்த தண்ணீரால் விவசாயி களுக்கு பலனில்லை. கடந்த 5 ஆண்டுகளாக காவிரி ஆற்றில் மணல் அள்ளப்பட்டுள்ளதால் ஆற்றில் 5 அடி ஆழம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றிலேயே தண்ணீர் தேங்கி நிற்கும். டெல்டா மாவட்ட கிளை வாய்க்கால்களையும் கடைமடைப் பகுதிகளையும் தண்ணீர் சென்றடையாது. எனவே அரசு வடமேற்கு பருவமழை துவங்க மேலும் 20 தினங்கள் உள்ளதால், மேட்டூரில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவை 25 ஆயிரம் கனஅடியாக உயர்த்தினால் மட்டுமே நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை காப்பாற்ற முடியும்.
அதேநேரத்தில் வானிலை ஆய்வு மையம், பருவநிலையைக் கணித்து இந்த ஆண்டு மழை குறைவாக இருக்கும் எனவும், வெய்யில் கடுமையாக இருக்கும் என ஏற்கெனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்த அறிவிபைப் பயன்படுத்தி மத்திய, மாநில அரசுகள் விவசாயி களுக்கு பல்வேறு ஆலோசனை வழங்கியிருந்தால் நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்ட விவசாயி களுக்கு இழப்பு ஏற்படாமல் தடுக்க முடியும். மழை குறைவு என்ற தெரிந்தவுடன் நெல், கரும்பு பயிரிடுவதைத் தவிர்த்து, சிறு தானிய வகைகளான மக்காச்சோளம், எள், கேழ்வரகு, கம்பு ஆகியவற்றை பயிரிடச் செய்திருக்கலாம். இவை வறட்சியைத் தாங்கி விளையக் கூடியவை என்பது குறிப்பிடத் தக்கது. விவசாயி களுக்கு உரிய நேரத்தில் வழங்க வேண்டிய தண்ணீரைக் கொடுத் தால் தான் தமிழகத்தை பஞ்சத்தி லிருந்து காப்பாற்ற முடியும். இல்லை யெனில் கர்நாடகத்தைப் போன்று தமிழகத்திலும் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் நிலை உருவாகும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT