Published : 21 Sep 2020 11:57 AM
Last Updated : 21 Sep 2020 11:57 AM
மத்திய அரசு பணியாளர் தேர்வுகளில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் பயிற்சிக்காக மத்திய அரசு நிதி உதவி அளிக்கிறது. இதில், கூடுதலான பயிற்சி நிலையங்களை சேர்க்க தமிழக அரசு பரிந்துரைக்கவில்லை என மக்களவையில் திமுக எம்.பி கனிமொழி கேள்விக்கு மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து மக்களவை திமுகவின் துணைத்தலைவரான கனிமொழி, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்ட விவரம், அதில் தேர்வானவர்கள் எண்ணிக்கை குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.
இதில் அவர். இப்பயிற்சிகளை ஊரகப்பகுதிகளிலும் துவங்கும் எண்ணம் அரசிடம் உள்ளதா? எனவும், இதுபோல் பழங்குடி மாணவர்களுக்கும் பயிற்சி அளிக்கும் எண்ணம் உள்ளதா? என்றும் கேட்டிருந்தார்.
இதற்கு எழுத்துப்புர்வ பதிலளித்து மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணை அமைச்சர் ரத்தன்லால் கட்டாரியா கூறியதாவது: தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதோடு மத்திய அரசு அவர்களுக்கு நிதி உதவியும் செய்கிறது.
இத்திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் பயிற்சி நிலையங்கள், மத்திய அரசிடம் பதிவு செய்கின்றன. இவற்றில் பயிற்சி எடுக்கும் மாணவர்களுக்கு மத்திய அரசு நிதிஉதவியும் செய்கிறது.
இந்த பயிற்சி நிலையங்கள் தமிழகத்தில் இரண்டு தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் ஆண்டிற்கு 200 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த இரண்டு மையங்களில் பயின்றவர்களில் 2017-18 இல் 15 மற்றும் 2018-19 ஆம் ஆண்டுகளில் 2.5 சதவிகித்திலும் தேர்ச்சி
பெற்றுள்ளனர். 2019-20 ஆம் ஆண்டிற்கான மற்றும் மாவட்டவாரியான புள்ளிவிவரமும் அரசிடம் இல்லை.
நடப்பு ஆண்டு பயிற்சி கரோனாவால் துவக்கவில்லை
மத்திய அரசே நேரடியாகப் பயிற்சி துவங்கும் திட்டங்கள் எதுவும் இல்லை. எனினும், ஏற்கனவே நடைபெறும் பயிற்சி நிலையங்கள் மாநில அரசின் பரிந்துரைகளின் அடிப்படையில் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
இவற்றுடன் கூடுதலானப் பயிற்சி நிலையங்களை சேர்க்க தமிழக அரசு எந்தவிதமானப் பரிந்துரையும் இதுவரை அளிக்கவில்லை. இத்திட்டத்தின் கீழ், 2007-08 முதல் 2011-12 ஆம் ஆண்டுகள் வரை பழங்குடி மாணவர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது.
இத்திட்டத்தை ஆய்விற்கு உட்படுத்தியதில் குறைந்த அளவிலான மாணவர்கள் அதில் தேர்ச்சி பெறுகின்றனர். இதனால் கடந்த 2013-14 ஆம் ஆண்டுகளில் அந்த திட்டம் கைவிடப்பட்டது. இவ்வாறு இணை அமைச்சர் தெரித்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT