Published : 21 Sep 2020 08:17 AM
Last Updated : 21 Sep 2020 08:17 AM
அதிமுகவில் நிலவும் பிரச்சினைகள் செப்.28-ம் தேதி நடைபெறும் அதன் செயற்குழுக் கூட்டத்தில் வெட்டவெளிச்சமாகும் என திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தெரிவித்தார்.
திருச்சியில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உறுதியளித்ததுபோல, திருச்சி காந்தி மார்க்கெட் தொடர்ந்து அதே இடத்தில் இருந்தால் சரிதான். இல்லை என்றால்திமுக ஆட்சிக்கு வந்தபிறகு நிச்சயம் அந்த மார்க்கெட் இப்போது இருக்கும் இடத்திலேயே செயல்படும்.
அதிமுகவில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இடையே நிலவும் பிரச்சினைகள் செப்.28-ம் தேதி நடைபெறும் அக்கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் வெட்டவெளிச்சமாகும். அதிமுகவினர் ஒற்றுமையாக பேசிக் கொள்வதாக அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கூறுகின்றனர். ஆனால், கத்திரிக்காய் முற்றினால் கடைத்தெருவுக்கு வந்துதானே ஆக வேண்டும்.
ஆட்சிக்காக கடந்த 10 ஆண்டுகள் பொறுத்திருந்த நாங்கள் இன்னும் 6 மாதங்கள் பொறுத்திருக்க மாட்டோமா?. இவ்வாறு கே.என்.நேரு தெரிவித்தார்.
அப்போது மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் வைரமணி, வடக்கு மாவட்டச் செயலாளர் ந.தியாகராஜன், மாநகரச் செயலாளர் மு.அன்பழகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
திமுக உறுப்பினர் சேர்க்கைக்காக எல்இடி திரை கொண்ட வாகனத்தை தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், எம்எல்ஏவுமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில் கே.என்.நேரு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT