Published : 20 Sep 2020 04:23 PM
Last Updated : 20 Sep 2020 04:23 PM
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் தாயார் நேற்று உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் ஆவார். தந்தை சுப்ரமணியம் ஐசிஎஸ் அதிகாரி ஆவார். தமிழரான ஜெய்சங்கர் தமிழ்நாடு கேடராக 1977-ல் ஐ.எஃப்.எஸ் அதிகாரியாக தேர்வானார். தற்போது வெளியுறவுத்துறைச் செயலராக உள்ள ஜெய்சங்கரின் தாயார் உடல்நலக்குறைவால் காரணமாக நேற்று காலமானார்.
தனது தாயார் மறைவு குறித்து ஜெய்சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Deeply grieved to inform of the passing away today of my mother Sulochana Subrahmanyam. We ask her friends and well-wishers to keep her in their thoughts. Our family is especially grateful to all those who supported her during her illness. pic.twitter.com/6hEzbFJB1q
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) September 19, 2020
அவருக்கு மத்திய அமைச்சர்கள் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் ஜெய்சங்கர் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஸ்டாலின் ட்விட்டர் பதிவு:
“தனது தாயார் சுலோச்சனா சுப்ரமணியம் அவர்களை இழந்து வாடும் வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இத்தகைய துயர்மிகு நேரத்தில் அவர்கள் வலிமை பெற்றிட விழைகிறேன்”.
My heartfelt condolences to Thiru @DrSJaishankar and his family on the demise of Mrs. Sulochana Subrahmanyam. I wish you strength in this difficult time. https://t.co/X54bWGvZff
— M.K.Stalin (@mkstalin) September 20, 2020
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT