Published : 20 Sep 2020 12:41 PM
Last Updated : 20 Sep 2020 12:41 PM
பெருமாளுக்கு உகந்த மாதமான புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையான நேற்று அனைத்து பெருமாள் கோயில் களிலும் சிறப்பு பூஜை நடந்தது.
சேலம் கோட்டை அழகிரிநாத சுவாமி கோயிலில் பெருமாள், சுந்தர வள்ளி தாயாருக்கு முத்தங்கி அலங் காரம் நடந்தது. ஆஞ்சநேயர் துளசி மாலை அலங்காரத்திலும், கருடாழ் வார், ஆண்டாள் பல வண்ண மலர் களால் சிறப்பு அலங்காரத்தில் சேவை சாதித்தனர்.
இதேபோல, செவ்வாய்ப்பேட்டை பாண்டுரங்கநாதர் சுவாமி கோயில், பிரசன்ன வெங்டாஜலபதி கோயில், சின்ன திருப்பதி வெங்கடேஸ்வர சுவாமி கோயில், லட்சுமி நாராயண சுவாமி கோயில், பட்டைக்கோயில் வரதராஜ பெருமாள் கோயில், சிங்கமெத்தை சவுந்த ரராஜ பெருமாள் கோயில், உடையாப் பட்டி சென்றாய பெருமாள் கோயில், நாம மலை வரதராஜ பெருமாள் கோயில், நெத்தி மேடு கரியபெருமாள் கோயில், அழகாபு ரம் பெருமாள் கோயில் என அனைத்து கோயில்களிலும் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தன.
மலை ஏற தடை
நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் காலை 9 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. சுவாமி வெள்ளிக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நாமக்கல் நரசிம்மர் கோயி லில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நைனாமலை வரதராஜ பெருமாள் கோயிலில் மலை ஏற தடை விதிக்கப் பட்டுள்ளதால் அடிவாரத்தில் உள்ள கோயிலில் சுவாமியை பக்தர்கள் வழிபட்டுச் சென்றனர். திருச்செங்கோட்டில் உள்ள மகாலட்சுமி சமேத வைகுந்த வேங்கடேச பெருமாள் கோயிலில் காலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
தங்கக் கவச அலங்காரம்
ஈரோடு கோட்டை பெருமாளுக்கு சந்தனம், பன்னீர்மூலிகை உள்ளிட்ட 16 வகையான திரவியங்கள் மூலம் அபிஷே கம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி தங்கக் கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
பவானி சாலையில் உள்ள பெருமாள் கோயில், அக்ரஹாரம் வீதியிலுள்ள பெருமாள் கோயில், கேஸ் நகர் பெருமாள் கோயில், வீரப்பன்சத்திரம், கருங்கல்பாளையம் போன்ற பகுதியில் உள்ள பெருமாள் கோயில்களிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது.
1200 பேருக்கு மட்டுமே அனுமதி
கிருஷ்ணகிரி அருகே கணவாய்ப் பட்டி வெங்கட்ரமண சுவாமி கோயி லில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கரோனா பரவாமல் தடுக்கும் வகையில் அரசு வழிகாட்டுதல்படி ஒரு நாளைக்கு 1200 பக்தர்களுக்கு மட்டுமே தரிசன டிக்கெட் வழங்கப்பட்டது. கோயிலுக்கு செல்லும் வழியில் 3 கிமீ தூரத்தில் பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு தரிசன டிக்கெட் மற்றும் அடையாள அட்டை உள்ளதா என போலீஸார் சோதனை மேற்கொண்டனர். அவர்கள் மட்டுமே சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
பாலேகுளி பெரிய மலை அனுமந்தராய சுவாமி கோயிலில் தரிசன டிக்கெட் பெற் றவர்கள் மட்டுமே தரிசனத் திற்கு அனுமதிக்கப்பட்டனர். ஐகொந்தம் கொத்தப்பள்ளி சீனிவாச பெருமாள் கோயில் சிறப்பு பூஜைகள் நடந்தன. கரோனா காலம் என்பதால் ஒருவர் பின் ஒருவராக கோயிலுக் கள் அனுமதிக்கப்பட்டனர். கோயில் நுழைவு வாயிலில் பக்தர் களுக்கு சானிடைசர் வழங்கப்பட் டது. உடல் வெப்பநிலை சோதனை செய்தபின்னர் கோயிலுக்குள்பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் தேங்காய், பழம் வைத்து வழிபாடு நடத்த தடை விதிக்கப்பட்டு இருந்தது. பொட்டலங் களில் அன்னதானம் வழங்க அனுமதி அளிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT