Published : 19 Sep 2020 07:10 PM
Last Updated : 19 Sep 2020 07:10 PM
கரிமேடு மீன் மார்க்கெட்டை மீண்டும் திறக்க வேண்டும், என அங்கு சில்லறை மீன் வியாபாரிகள் எதிர்பார்ப்பு மீன் வியாபாரமும், மீன் வெட்டும் தொழிலும் செய்து வந்த தொழிலார்கள் எதிர்பார்க்கின்றனர்.
தென் தமிழகத்தில் உள்ள மீன் மார்க்கெட்டில் மதுரை கரிமேடு ராம்நகர் மீன் மார்க்கெட் முக்கியமானது. கடற்கரை மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட மீன்கள் இங்கு
மொத்த மீன் வியாபாரமாகவும், சில்லறை மீன் வியாபாரமாகவும் நடக்கும். மொத்த மீன் வியாபாரம் இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 7 மணி வரையும், சில்லரை மீன் வியாபாரமும் மற்றும் மற்ற மீன் சார்ந்த தொழில்களும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கும்.
கரோனா தொற்று நோயால் இந்த மீன்மார்க்கெட் தற்காலிகமாக 2 மாதம் முன் மதுரை மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த சென்ட்ரல் மார்க்கெட்டிற்கு மாற்றப்பட்டது. சில்லறை மீன் வியாபாரிகளும், அங்கு மீன் வியாபாரமும், மீன் வெட்டும் தொழிலும் செய்து வந்தனர்.
இந்நிலையில் சில்லரை மீன் கடை வியாபாரிகள் ஊரடங்கு தளர்வால் கடந்த சில நாட்களாக மோதிலால் மெயின் ரோட்டில் கடைகளை அமைத்து சில்லறை மீன் வியாபாரம் செய்து வந்தோம்.
தற்போது போலீஸாரும், மாநராட்சி ஊழியர்களும் அப்பகுதியில் கடை அமைக்கவும், மீன் வெட்டவும் அனுமதிக்கவில்லை. அவர்களை அப்புறப்படுத்தியுள்ளனர். அதனால், அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து சில்லரை மீன் வியாபாரிகள் கூறுகையில், ‘‘சில்லறை மீன் வியாபாரம் தொழில் செய்ய முடியாமல் வருமானம் இல்லாமல் தவிக்கிறோம்.
எங்களுடைய அடிப்படை வாழ்வாதாரமே சிதைந்து விட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மீன்சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது கரிமேடு மீன்மார்க்கெட் சென்ட்ரல் மார்க்கெட்டில் செயல்படுவதால் கரிமேடு மார்க்கெட் உள்பகுதி மிகவும் விசாலமாக உள்ளது. அங்கு நாங்கள் சில்லறை மீன் வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும், ’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT