Published : 18 Mar 2014 09:20 AM
Last Updated : 18 Mar 2014 09:20 AM

வேட்பாளர்களை இறுதி செய்வதற்காக டெல்லி விரைந்தார் ஞானதேசிகன்

வேட்பாளர்களை இறுதி செய்வதற்காக கட்சி மேலிட அழைப்பின்பேரில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் டெல்லி சென்றுள்ளார்.

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் 39 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டி யிடுகிறது. இறுதிப் பட்டியலில் இடம் பெறும் வேட்பாளர்களின் பெயரை முடிவு செய்வதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் திங்கள்கிழமை டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

அன்று மாலையே, தேர்தல் குழு நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசினார். வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு, இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x