Published : 19 Sep 2020 12:45 PM
Last Updated : 19 Sep 2020 12:45 PM
மூளை தண்டுவட செயல்பாடு பாதிக்கப்பட்டிருந்ததுடன், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப் பிணிக்கு அறுவைச் சிகிச்சை மூலம் ஆரோக்கியமான பெண் குழந்தை பிறந்தது.
புதுக்கோட்டை அருகே முள்ளூர் கிராமத்தை சேர்ந்த 22 வயது கர்ப்பிணி, கடந்த மாதம் தனது முதல் பிரசவத்துக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மகப்பேறு சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.
இப்பெண்ணுக்கு சிறு வயதிலி ருந்தே மூளை தண்டுவட செயல்பாடு பாதிக்கப்பட்டிருந்தது. இதனால், நடப்பதற்கும், இயல் பாக பேசுவதற்கும் இவர் சிரமப்பட்டு வந்தார். இந்நிலையில், இப்பெண்ணுக்கு மகப்பேறு சிகிச்சையையொட்டி அனைத்து மருத்துவப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. அதில், இப்பெண்ணுக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப் பட்டது. மேலும், அவருக்கு சுகப்பிரசவத்துக்கும் வாய்ப்புகள் இல்லாத நிலை இருப்பதையும் மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
இதையடுத்து, மயக்கவியல் மருத்துவர் மூலம் தகுதி பரிசோதனை செய்யப்பட்டு, அறுவைச் சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. மேலும், இதுபோன்ற சிக்கல் நிறைந்த கர்ப்பிணிகளுக்கு முதுகுத் தண்டு வட ஊசி மூலம் மயக்க மருந்து செலுத்தி அறுவை சிகிச்சை செய் வது மிகுந்த சவாலான ஒன்றாகும்.
மருத்துவக் கல்லூரி முதல்வர் எம்.பூவதி தலைமையில் மருத்துவர்கள் ஜெயராணி, சாய்பிரபா, ராஜராஜன், திவ்யா ஆகியோர் கொண்ட குழுவினர் கடந்த செப்.12-ம் தேதி அறுவைச் சிகிச்சை செய்தனர். அதில், ஆரோக்கியமான பெண் குழந்தை பிறந் தது. சவாலான அறுவைச் சிகிச்சையை செய்து சாதித்த மருத்துவக் கல்லூரி முதல்வர் எம்.பூவதி தலைமையிலான மருத்துவர்களுக்கு நேற்று வாழ்த்து தெரிவித்த ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி கூறியது: இதுபோன்ற முதுகுத் தண்டுவட பாதிப்பானது ஒரு லட்சம் பேரில் 2 பேருக்கு மட்டுமே ஏற்படக் கூடியதாகும். கரோனா பாதிப்பை குணப்படுத்தி, இத்தகைய அரிதான நோயால் பாதிக்கப்பட்ட இந்த கர்ப்பிணிக்கு கடினமான அறுவை சிகிச்சையை மிகவும் திறமையாக செய்து முடித்து, தாய் மற்றும் சேயை காப்பாற்றி வீட்டுக்கு மருத்துவர்கள் அனுப்பி வைத்துள்ளனர்.
கடின முயற்சியுடன் சிறப்பாக செயல்பட்ட புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவக் குழுவினருக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT