Last Updated : 18 Sep, 2015 12:28 PM

 

Published : 18 Sep 2015 12:28 PM
Last Updated : 18 Sep 2015 12:28 PM

மதிமுக பொருளாளர் பொறுப்பு, கட்சியிலிருந்து விலகியது ஏன்?- மாசிலாமணி விளக்கம்

மதிமுகவின் மாநில பொருளாளர் மாசிலாமணி கட்சியிலிருந்து விலகுவதாக இன்று காலை திண்டிவனத்தில் அறிவித்தார்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த மாசிலாமணி கூறியதாவது:

''திராவிட இயக்க குடும்பத்தில் பிறந்து வளர்ந்த நான் இந்த இயக்கத்திற்கு எந்த கேடும் உருவாகிட கூடாது என்ற கொள்கையோடு மதிமுகவில் பணியாற்றினேன்.

கடந்த 15ம் தேதி திருப்பூர் மாநாட்டில் கூட்டணி பற்றி அறிவித்தது திராவிட இயக்க எதிரிகளுக்கு இது வாய்ப்பாகிவிடும் அபாயத்தைக்கண்டு அதிர்ச்சியுற்ற நான் இனியும் மதிமுகவில் தொடர்வது இயலாது என்கிற முடிவை எடுத்தேன்.

இதுவரை கட்சிப்பணிக்காக தொண்டாற்றிய நான் தற்போது மதிமுகவின் பொருளாளர் பதவிலிருந்தும், கட்சியின் உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் விலகிக்கொள்கிறேன்'' என்றார் மாசிலாமணி.

வேறு கட்சியில் சேர வாய்ப்புள்ளதா என்ற நிருபர்களின் கேள்விக்கு தற்போது உள்ள மனநிலையில் விலகியுள்ளேன். அதை மட்டுமே இப்போது கூறமுடியும். இது தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர், அவைத்தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளேன் என்றார்.

பதவி சுகத்துக்காக விலகல்- வைகோ சாடல்

இது தொடர்பாக மாமல்லபுரத்தில் வைகோ பேசுகையில், ''பதவி சுகத்தை அனுபவித்தர்கள் மட்டுமே மதிமுகவிலிருந்து விலகியுள்ளனர். தொண்டர்கள் யாரும் விலகிச் செல்லவில்லை. எந்த தலைவர்களாலும் மதிமுக கட்சி உருவாக்கப்பட்டது அல்ல. தொண்டர்களால் உருவாக்கப்பட்ட கட்சி. எம்எல்ஏ, எம்பி பதவிக்கு ஆசைப்பட்டு கட்சியை விட்டு விலகுகின்றனர்'' என்று வைகோ குற்றஞ்சாட்டினார்.

அடுத்தடுத்து அதிர்ச்சி!

கடந்த 13-ம் தேதி காஞ்சிபுரம் மாவட்ட மதிமுக செயலாளர் பாலவாக்கம் சோமு திமுக தலைவர் கருணாநிதி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். அதிமுகவுக்கு ஆதரவாக வைகோவின் செயல்பாடுகள் அமைந்துள்ளதால் மதிமுகவில் இருந்து விலகியதாக அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சேலம் மாவட்ட மதிமுக செயலாளர் கு.சீ.வெ. தாமரைக்கண்ணன், துணை செய லாளர் எஸ்.வி.ராஜேந்திரன், மற்றொரு துணை செயலாளர் டி.ஆனந்தி கண்ணன், மாவட்ட அவைத்தலைவர் ஜெயவேல், சேலம், வாழப்பாடி, பெத்தநாயக் கன் பாளையம், ஓமலூர் ஆகிய ஒன்றியங்களின் மதிமுக செயலாளர்களும் நேற்று (வியாழக்கிழமை) திமுகவில் இணைந்தனர்.

மாநில மகளிரணி செயலாளர் குமரி விஜயகுமாரியும் சென்னை அண்ணா அறிவால யத்தில் கருணாநிதி முன்னிலை யில் நேற்று (வியாழக்கிழமை) திமுகவில் இணைந் தார்.

ஒரே வாரத்தில் மதிமுக மாவட்டச் செயலாளர்கள் இருவரும், சேலம் மாவட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகளும், மதிமுகவின் மாநில பொருளாளரும் திமுகவில் இணைந்திருப்பது மதிமுகவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x