Published : 18 Sep 2020 07:42 AM
Last Updated : 18 Sep 2020 07:42 AM
பெண்கள் வீட்டிலிருந்தபடியே சுயதொழில் செய்து பொருளீட்டுவதற்கான வழிமுறைகள் குறித்த இணையவழி கலந்துரையாடல் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்பாக நாளை (செப்.19) நடைபெறவிருக்கிறது.
கரோனா ஊரடங்கு காலத்தில் பெரும்பாலான குடும்பங்கள் பொருளாதார பாதிப்புக்கு ஆளாகியிருக்கின்றன. பலருக்கு வேலை பறிபோன நிலையில் குடும்பத்தை நடத்துவதற்கே பலரும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் பெண்கள் சுயதொழில் செய்வதன் மூலம்குடும்பத்தின் பொருளாதார சீர்குலைவை ஓரளவுக்குச் சரிசெய்ய முடியும்.
மாலை 4 மணிக்கு
அந்த நோக்கில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்பாகநாளை (செப்.19-சனிக்கிழமை)மாலை 4 மணிக்கு இணையவழி கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் மேம்பாட்டு நிறுவனத்தின் துணை இயக்குநர் தர்மசெல்வன் இதில் பங்கேற்கிறார். பெண்கள் சுயதொழில் செய்வதற்கான வாய்ப்புகள், அரசுத் திட்டங்கள், தொழிலுக்கான முதலீட்டுக்குக் கடனுதவி பெறும் வழிமுறைகள் போன்றவை குறித்து அவர் பகிர்ந்துகொள்கிறார்.
வாசகர்களின் கேள்விகளுக்கும் அவர் பதில் அளிப்பார். நிகழ்ச்சியில் பங்குபெற https://connect.hindutamil.in/event/34-msme-women.html என்கிற இணைப்புக்குச் சென்று பதிவு செய்துகொள்ள வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT