Published : 16 Sep 2020 01:39 PM
Last Updated : 16 Sep 2020 01:39 PM
கரோனா காரணமாக ஏப்ரல் மாதம் நடைபெறுவதாக இருந்த கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, மாணவர்களுக்குத் தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது. இளங்கலை மற்றும் முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் இறுதி செமஸ்டர் தேர்வுகள் நடைபெற உள்ளன.
யுஜிசி வழிகாட்டுதலின்படி, முதல் முறையாக ஆன்லைன் மூலம் செப்டம்பர் 30-ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறுகின்றன. இதற்கான தேர்வுக்கால அட்டவணைகள் மற்றும் தேர்வுக்கான விதிமுறைகளைப் பல்வேறு பல்கலைக்கழகங்கள் வெளியிட்டுள்ளன.
பொதுவான விதிமுறைகளாக
* ஏ4 தாளில் மட்டுமே தேர்வு எழுதவேண்டும். தாளின் ஒரு பக்கத்தில் மட்டுமே எழுத வேண்டும்.
* விடைகள் 18 பக்கங்களுக்குள் இருக்க வேண்டும்.
* விடைத்தாளை ஸ்கேன் செய்து ஒரு மணி நேரத்துக்குள் பல்கலைக்கழக இணைப்பில் உள்ள முகவரியில் பதிவேற்றம் செய்ய வேண்டியது அவசியம்.
* அதற்கான வசதி இல்லாமல், இணையத்தில் பதிவேற்ற முடியாதவர்கள் விரைவுத் தபால் மூலம் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பலாம்.
* அருகிலேயே கல்லூரி இருந்தால் நேரில் சென்று விடைத்தாளை அளிக்கலாம்.
* விடைத்தாளின் மேல் பக்கத்தில் மாணவர்களின் பதிவு எண், பக்க எண், பாடப்பிரிவு உள்ளிட்டவற்றைக் கட்டாயம் ஒவ்வொரு பக்கத்திலும் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் ஒவ்வொரு பல்கலைக்கழகமும் வெவ்வேறு தேர்வுக்கால அட்டவணைகள் மற்றும் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளைப் பட்டியலிட்டுள்ளன.
அவற்றின் தொகுப்பு:
சென்னைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்புகளுக்கான இறுதிப் பருவத் தேர்வுகள் செப்டம்பர் 21 முதல் 25-ம் தேதி வரை நடைபெறுகின்றன. காலை, மதியம் என இரு வேளைகளிலும் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக செப்.18, 19 ஆகிய தேதிகளில் மாதிரித் தேர்வு நடைபெறுகிறது.
மாணவர்கள் தங்களுக்கான தேர்வு அட்டவணையைக் காண: https://egovernance.unom.ac.in/internal/timetable/tt.html
தேர்வு விதிமுறைகள் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு: https://www.unom.ac.in/webportal/uploads/announcements/student-instructions_20200915112917_73266.pdfs
****
கோவை பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு செப்.21-ம் தேதி இறுதிப் பருவத் தேர்வு தொடங்குகிறது. செப்.30 வரை இணைய வழியில் தேர்வுகள் நடைபெற உள்ளன.
காலை 10 மணி முதல் 1 மணி வரை 3 மணி நேரங்கள் தேர்வு நடைபெறும் என்று பாரதியார் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
தேர்வு விதிமுறைகள் குறித்த கூடுதல் விவரங்களை அறிய: https://www.b-u.ac.in/temp/exam_modalities.pdf
இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்புகளுக்கான தேர்வு அட்டவணை: https://www.b-u.ac.in/Home/UniNews2
****
மதுரை காமராசர் பல்கலைக்கழகம் இளங்கலைப் படிப்புகளுக்கான தேர்வை செப்.18-ம் தேதி தொடங்கி, செப்.30-ம் தேதி வரை நடத்துகிறது. அதே நேரத்தில் முதுகலைப் படிப்புகளுக்கான தேர்வு செப்.21-ம் தேதி தொடங்கி, செப்.25-ம் தேதி வரை நடைபெறுகிறது. எம்பிஏ படிப்புகளுக்கான தேர்வு செப்.17-ம் தேதி தொடங்கி, செப்.30-ம் தேதி வரை நடைபெறுகிறது.
தேர்வுக்கால அட்டவணை: https://mkuniversity.ac.in/new/examination/ExaminationSchedule
கூடுதல் விவரங்களுக்கு: https://mkuniversity.ac.in/new/notification_2020/Revised%20Time%20Table%20for%20End%20Semester%20Examinations%20Students%20-%20reg-2.pdf
****
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்புகளுக்கான இறுதிப் பருவத் தேர்வுகள் செப்.21 முதல் 30-ம் தேதி வரை நடைபெற உள்ளன.
இளங்கலை தேர்வுக்கால அட்டவணை: http://www.bdu.ac.in/examinations/docs/timetables/apr2020/ug/UG-CBCS-2016-BATCH-EXAM-TIMETABLE-APR2020.pdf
முதுகலை தேர்வுக்கால அட்டவணை- http://www.bdu.ac.in/examinations/docs/timetables/apr2020/pg/PG-CBCS-2018-BATCH-EXAM-TIMETABLE-APR2020-v2.pdf
****
அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான தேர்வுகள் ஆன்லைன் வழியில் நடைபெற உள்ளன. இதற்கான தேர்வுகள் செப்.22-ம் தேதி தொடங்கி 29-ம் தேதியுடன் முடிவடைகின்றன. தியரி பாடங்கள் 24-ம் தேதி தொடங்குகின்றன.
இறுதி செமஸ்டர் தேர்வில் அப்ஜெக்டிவ் முறையில் 40 கேள்விகள் கேட்கப்படும். அதில் 30 கேள்விகளுக்குப் பதிலளித்தால் போதும். ஒவ்வொரு பாடத்திலும் உள்ள 5 யூனிட்டுகளில் 4 யூனிட்டுகளை மாணவர்கள் பயின்றால் போதும். முதல் முறையாக ஆன்லைனில் தேர்வு நடத்தப்படுவதால், மாதிரி இணையத் தேர்வு 19 மற்றும் 21-ம் தேதிகளில் நடைபெறும்.
தேர்வின்போது கேமரா, மைக், லேப்டாப் உள்ளிட்டவற்றை மாணவர்கள் தயாராக வைத்திருக்க வேண்டும். இணையவழித் தேர்வின் இடையே மின்சாரக் கோளாறு அல்லது இணையத்தில் பிரச்சினை என்றால் உடனடியாக ஆசிரியர்களிடம் தெரிவிக்க வேண்டும்.
பி.இ., பி.டெக்., பி.ஆர்க். பாடங்களுக்கான தேர்வுக்கால அட்டவணை: https://aucoe.annauniv.edu/ttam20finalsempdf/ch.html
எம்.ஆர்க்., எம்பிஏ பாடங்களுக்கான தேர்வு அட்டவணை: https://aucoe.annauniv.edu/ttam20finalsempdf/chp.html
****
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் இறுதிப் பருவத் தேர்வுகள் செப்.21-ம் தேதி தொடங்கி செப்.29 வரை நடைபெறும் என்று பல்கலைக்கழகத் தேர்வாணையர் கதிரவன் தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை இணைப்பு: https://periyaruniversity.ac.in/Documents/2020/coe/Missing.pdf
எலக்டிவ் பாடங்களுக்கான மாற்றியமைக்கப்பட்ட அட்டவணை: https://periyaruniversity.ac.in/Documents/2020/coe/Revised.pdf
****
இந்திரா காந்தி திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் இறுதிப் பருவத் தேர்வுகள் செப்டம்பர் 17-ம் தேதி தொடங்கி அக்டோபர் 10-ம் தேதி வரை நடைபெறுகின்றன.
மாணவர்கள் தேர்வு அட்டவணையைத் தெரிந்துகொள்ள http://www.ignou.ac.in/userfiles/DATE%20SHEET%2020_7_20%20(1).pdf என்ற இணைப்பைக் க்ளிக் செய்யலாம்.
ஹால் டிக்கெட்டைத் தரவிறக்கம் செய்ய: https://ignouhall.ignou.ac.in/HallTickets/HALL0620/Hall0620.asp
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT