Published : 18 Sep 2015 08:55 AM
Last Updated : 18 Sep 2015 08:55 AM

ஒரு பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டம்: முன்னாள் ஜவான்கள் அதிருப்தி

முன்னாள் ராணுவத்தினருக்கான ஒரு பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டத்தில் ஜவான்களுக்கான நியாயமான உரிமைகள் மறுக்கப்பட் டிருப்பதாக ’வாய்ஸ் ஆஃப் எக்ஸ் சர்வீஸ்மேன் சொஸைட்டி’ அமைப்பு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள சுமார் 28 லட்சம் முன்னாள் ராணுவத் தினர்களில் சுமார் 27 லட்சம் பேர் ஜவான்கள். மத்திய அரசு முன்னாள் ராணுவத்தினருக்கான ஒரு பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டத்தை அண்மையில் அறிவித்தது. இதில் ஜவான்களுக்கு பெரிய அளவில் எந்த பலனும் இல்லை என்கிறது ‘வாய்ஸ் ஆஃப் எக்ஸ் சர்வீஸ்மேன் சொஸைட்டி’.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் பேசிய அந்த அமைப்பின் அகில இந்திய துணைத் தலைவரும் செய்தி தொடர்பாளருமான எஸ்.வரத ராஜன், “ஜவானுக்கு ரூ.10,400தான் ஓய்வூதியம். அதிகாரிகள் ரூ.56,000 முதல் 1.40 லட்சம் வரை ஓய்வூதியம் பெறுகின்றனர்.

பாரபட்சம் ஏன்?

ஜவான்களுக்கு ஒரே மாதிரியான ஓய்வூதியம் இல்லாத நிலையில் பலகட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதன் பிறகு அறிவிக்கப்பட்ட பென்ஷன் திட்டத்தால் ஜவான்களுக்கு ரூ.500 முதல் ரூ.1,500 வரை மட்டுமே கூடுதலாக பலன் கிடைக்கும் ஆனால், அதிகாரிகளுக்கு ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.40 ஆயிரம் வரை பலன் கிடைக்கும். அதிகாரிகளுக்கு ’மிலிட்டரி சர் வீஸ் அலவன்ஸ் பே’ (எம்.எஸ்.பி.) ரூ.6 ஆயிரமும் ஜவான் களுக்கு ரூ.2 ஆயிரமும் கொடுக் கிறார்கள்.

பென்ஷன் கணக்கிடும் போது இது அடிப்படை சம்பளத் துடன் சேர்க்கப்படும் என்பதால் பென்ஷன் சலுகை கூடுதலாக கிடைக்கும். எனவே ஜவான்களுக் கும் எம்.எஸ்.பி-யை ரூ.6 ஆயிர மாக உயர்த்தினால் ஓரள வுக்கு நிலைமை சரியாகிவிடும்.

எந்த உயிரும் விலைமதிப் பற்றதுதான். ஆனால், பணியில் அதிகாரிகள் இறந்தால் அவரது மனைவிக்கு ரூ.35,000 பென்ஷனும் ஜவான் இறந்தால் அவரது மனைவிக்கு ரூ.3,500 பென்ஷனும் கொடுக்கிறார்கள். ஏன் இந்த பாரபட்சம்?

உறுப்புகளை இழந்தால்

தாக்குதலின்போது உடல் உறுப்புகளை இழந்தால் அதிகாரி களுக்கு ரூ.2 கோடி வரை இழப்பீடு. ஆனால், ஜவான்களுக்கு ரூ.25 லட்சம்தான் இழப்பீடு. இதையும் ஒரே மாதிரியாக வழங்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 20-ல் ஜவான்களை திரட்டி டெல்லியில் ’ஜவான் ஜாக்ருதி’ விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடத்த இருக் கிறோம்’’என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x