Published : 14 Sep 2020 08:10 AM
Last Updated : 14 Sep 2020 08:10 AM

மாணவர்கள் போட்டித் தேர்வுகளை எழுதுவதற்கு பெற்றோரும், ஆசிரியர்களும் ஊக்கப்படுத்த வேண்டும்: பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா அறிவுறுத்தல்

திருநெல்வேலி

மாணவர்கள் போட்டித் தேர்வுகளை எழுதுவதற்கு பெற்றோரும், ஆசிரியர்களும் ஊக்கப்படுத்த வேண்டும் என்று பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா அறிவுறுத்தினார்.

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் பாஜக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

போட்டித் தேர்வுகளை எழுதுவதற்கு பெற்றோரும், ஆசிரியர்களும் மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் நீட் தேர்வு குறித்து மாணவர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி, அவர்களை தற்கொலை செய்யத் தூண்டுகின்றன.

8-ம் வகுப்பு வரை தேர்வு நடத்தக்கூடாது, தேர்வில் பெயில் ஆக்கக்கூடாது என்றால், குழந்தைகளின் படிப்புத் திறனை கண்டறிய ஏதாவது அளவுகோல் வேண்டாமா? ஐஐடி நுழைவுத்தேர்வும் நீட் தேர்வைப்போல் தான் நடக்கிறது. அதற்கெல்லாம் இதுவரையாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

விவசாயிகளுக்கு மோடி அரசு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்குகிறது. ஆனால், தமிழகத்தில் 5 லட்சம் போலி விவசாயிகள் இந்த இலவச பணத்தை பெற்றுள்ளனர். அதிகாரிகள் உதவி இல்லாமல் இப்படி நடக்காது. வரும் தேர்தலில் ஊழலுக்கு எதிரான நிலையை பாஜக முன்னிறுத்த உள்ளது.

ரஜினிகாந்த் பிரபலமான ஆளுமை. அவர் கட்சி ஆரம்பிக்காமல் அவரைப் பற்றி எதையும் பேச நான் தயார் இல்லை என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x