Published : 14 Sep 2020 07:36 AM
Last Updated : 14 Sep 2020 07:36 AM

பெரியார் மணியம்மை பல்கலை. முன்னாள் துணைவேந்தர் காலமானார்

தஞ்சாவூர்

தஞ்சாவூர் பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர் நல்.ராமச்சந்திரன்(60). ஒரத்தநாடு அருகேயுள்ள புலவன்காடைச் சேர்ந்த இவர், பல்வேறு சமூகப் பணிகளிலும் ஈடுபட்டு வந்தார்.

இவருக்கு கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதற்காக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று இதய செயலிழப்பு ஏற்பட்டதையடுத்து நல்.ராமச்சந்திரன் உயிரிழந்தார்.

இவரது மறைவுக்கு பல்கலைக்கழக வேந்தரும், திராவிடர் கழகத்தலைவருமான கி.வீரமணி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x