Published : 12 Sep 2020 04:30 PM
Last Updated : 12 Sep 2020 04:30 PM

கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பில் ரூ.1.77 கோடியில் திருநங்கைகளுக்கான பசுமை வீடுகள் திறப்பு

கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு சந்தீப் நகரில் திருநங்கைகளுக்கான கட்டப்பட்ட பசுமை வீடுகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்து வீடுகளுக்கான சாவிகளை வழங்கினார்.

கோவில்பட்டி 

கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு கிராமத்தில் ரூ.1.77 கோடி செலவில் திருநங்கைகளுக்காக கட்டப்பட்ட பசுமை வீடுகள், கால்நடை கொட்டகை திறப்பு விழா நடந்தது.

கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு கிராமம் சந்தீப் நகரில் தலா ரூ.2.10 லட்சத்தில் 30 திருநங்கைகளுக்கு ரூ.63 லட்சத்தில் பசுமை வீடுகள், ரூ.14.42 லட்சத்தில் குடிநீர் மற்றும் மின் இணைப்பு, ரூ.22 லட்சத்தில் தார்ச்சாலை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தலா ரூ.1.18 லட்சத்தில் 30 பேருக்கு ரூ.54 லட்சத்தில் கால்நடை கொட்டகை மற்றும் அத்தியாவசிய தேவைகள் என ரூ.1.77 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்து கொண்டு திருநங்கைகளுக்கான பசுமை வீடுகள் மற்றும் கால்நடை கொட்டகை, புதிதாக அமைக்கப்பட்ட தார்ச்சாலை ஆகியவற்றை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றி பார்வையிட்டார்.

முன்னதாக, தூத்துக்குடி மாவட்டத்தில் சத்துணவு அருந்தும் மாணவர்களுக்கு உலர் உணவுடன் முட்டை வழங்கும் பணி கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டி புனித அலோசியஸ் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி வைக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில், அமைச்சர் கடம்பூர் ராஜூ உலர் உணவுடன் முட்டை வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் திட்டங்குளம் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.5 லட்சத்தில் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடை, குலசேகரபுரத்தில் ரூ.9.50 லட்சத்தில் அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலை மற்றும் ரூ.17.61 லட்சம் செலவில் கட்டப்பட்ட திட்டங்குளம் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் ஆகியவற்றை அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார். பின்னர் லிங்கம்பட்டி ஊராட்சியில் ரூ.27.25 லட்சத்தில், ஒரு லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சிகளில், துணை ஆட்சியர் (பயிற்சி) பிரீத்விராஜ், சட்டப்பேரவை உறுப்பினர் சின்னப்பன், திட்ட இயக்குனர் தனபதி, கோட்டாட்சியர் விஜயா, வட்டாட்சியர் மணிகண்டன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாணிக்கவாசகம், வசந்தா, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் சத்யா, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தங்க மாரியம்மாள், மந்திதோப்பு ஊராட்சி தலைவர் முத்துலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x