Published : 12 Sep 2020 11:09 AM
Last Updated : 12 Sep 2020 11:09 AM
சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 7 ஆயிரம் மலர்த் தொட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், இந்தாண்டு 2-ம் சீசனுக்காக டேலியா, சால்வியா, இன்காமேரிகோல்டு, பிரஞ்சுமேரிகோல்டு, பிகோனியா, டெய்சி, காலண்டுலா, டயான்தஸ், கிரைசாந்திமம், ஆஸ்டர், பிரிமுலா, பால்சம், அஜிரேட்டம், ரனன்குலஸ், சைக்ளமன், அந்தூரியம், ஆர்கிட், டியுப்ரஸபிகோனியா, பிலோனியா, ஜெரேனியம், கேலஞ்சோ ஆகிய 140 ரகங்களை கொண்ட மலர்ச்செடிகள் 7,000 மலர்த் தொட்டிகளில் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
மலர்த் தொட்டிகளை கண்காட்சித் திடலில் அடுக்கி வைக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா நேற்று தொடங்கி வைத்தார். அதன்பின் அவர் கூறும்போது, ‘‘மலர்க்காட்சி திடல் சுற்றுலாப் பயணிகளுக்காக ஒருமாத காலம் திறந்து வைக்கப்படும். எனவே, நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், கரோனா வழிமுறைகளை கடைப்பிடித்து கண்காட்சியை கண்டுகளித்து செல்லலாம்’’ என்றார்.
மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுப்ரியா சாஹூ, கூடுதல் ஆட்சியர் மோனிகா ராணா, தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் சிவசுப்ரமணியம் சாம்ராஜ், துணை இயக்குநர் உமாராணி, உதவி இயக்குநர் ராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT